பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா தலைமையில், பாஜக ஆளும் மாநில முதலமைச்சர்களின் கூட்டம், டெல்லியில் இன்று நடைபெறுகிறது.
மத்தியப்பிரதேசம், சத்தீஷ்கர், ராஜஸ்தான் மாநில சட்டப் பேரவைகளுக்கு இந்த ஆண்டு இறுதியில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. நாடாளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், பாஜக ஆளும் மாநில முதலமைச்சர்களின் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், பாஜக தலைவர் அமித் ஷா பங்கேற்கிறார். பாஜக ஆளும் 15 மாநிலங்களின் முதலமைச்சர்கள், தேசிய ஜனநாயக கூட்டணி ஆளும் 4 மாநிலங்களின் துணை முதலமைச்சர்கள் ஆகியோர் கலந்துக் கொள்கின்றனர்.
மேலும், மத்திய அரசின் திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்ப்பது மற்றும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான உத்திகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளது. மாநிலங்களின் வளர்ச்சி திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் பற்றி ஆலோசனை நடத்தப்பட உள்ளது என்றும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.