கர்நாடக முதல்வரின் பரிசை வேண்டாமென திருப்பி அளித்த BJP MP!

கர்நாடக முதல்வர் HD குமாரசாமி அளித்த iPhoneX-னை வேண்டாம் என பாஜக MP ராஜீவ் சந்திரசேகர் திருப்பி அளித்த விவகாரம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!

Last Updated : Jul 17, 2018, 07:57 PM IST
கர்நாடக முதல்வரின் பரிசை வேண்டாமென திருப்பி அளித்த BJP MP! title=

கர்நாடக முதல்வர் HD குமாரசாமி அளித்த iPhoneX-னை வேண்டாம் என பாஜக MP ராஜீவ் சந்திரசேகர் திருப்பி அளித்த விவகாரம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!

தனக்கு வந்த விலைமதிப்பான கைப்பேசியினையும், அதனை ஏன் வேண்டாம் என்றார் என்பது குறித்தும் தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக MP ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

அவர் தனது ட்விட்டில் தெரிவித்துள்ளதாவது...

"மதிப்புமிகு கர்நாடக முதல்வர் HD குமாரசாமி அவர்களே... காவிரி விவகாரம் குறித்து அனைத்து MP-களும் விவாதிக்க அழைத்தமைக்கு நன்றி., ஆனால் அத்துடன் வந்திருக்கும் இந்த iPhoneX-னை என்னால் ஏற்க இயலாது. எளிமையின் அடையாளமாக உங்களை காட்டிக்கொள்ள விரும்பும் நீங்கள், துப்பறிவாளர்களுக்கான சம்பளத்தை தர மறுக்கும் நீங்கள், ஏன் இந்த விலையுர்ந்த கைபேசியினை பரிசாக அளிக்கின்றீர்.?" என குறிப்பிட்டுள்ளார்.

பெங்களூருவில் கடந்த சில மாதங்களாகவே சம்பள பாக்கி தொடர்பாக துப்புறவு ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இம்மாதத்தின் முற்பகுதியில் 40 வயது மதிப்புதக்க துப்புறவு ஊழியர் ஒருவர் இறந்தது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவத்தை அடுத்து நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் KC மருத்துவமனையின் முன் போராட்டத்தில் குதித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த பிரச்சனைகள் ஒருபுறம் இருக்க தற்போது கர்நாடக முதல்வர் MP-களுக்கு iPhoneX அளித்துள்ள விவகாரம் சர்சையினை எழுப்பியுள்ளது!

Trending News