டெல்லியில் கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 67 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
இதற்கிடையில் டெல்லி ராஜோரிகார்டன் தொகுதி ஆம் ஆத்மி எம்.எல்.ஏவான ஜர்னயில் சிங் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து இந்த தொகுதிக்கு ஏப்ரல் 9-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.
இந்த தொகுதியில் ஆளும் ஆத்மி கட்சி, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது.
இந்நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. ஆரம்பத்தில் இருந்தே முன்னிலை வகித்த பாஜக வேட்பாளர் மஜிந்தர் சிங் சிர்ஷா 14,500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். காங்கிரஸ் 2வது இடம் பெற்றது. ஆளும் கட்சியான ஆம் ஆத்மி கட்சி 10 ஆயிரம் வாக்குகள் பெற்று டெபாசிட் இழந்ததுடன் 3வது இடத்துக்கு தள்ளப்பட்டது.
ஜீ நியூஸ் (தமிழ்) வாசகர்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
மகிழ்ச்சி பொங்க செல்வம் செழிக்க தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!