கோவா, பவானா, நந்தியாலா சட்டமன்ற தேர்தல்: யார் வெற்றி!

Last Updated : Aug 28, 2017, 02:01 PM IST
கோவா, பவானா, நந்தியாலா சட்டமன்ற தேர்தல்: யார் வெற்றி! title=

கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதி கோவா மாநிலத்தின் பனாஜி, வால்போய் சட்டமன்ற தொகுதிகளுக்கும், டெல்லியின் பவானா மற்றும் ஆந்திர பிரதேசத்தின் நந்தியாலா தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடைபெற்றது. 

இந்நிலையில், இடைத் தேர்தல் நடைபெற்ற 4 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. 

பனாஜி தொகுதியி தொடக்கம் முதலே கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் முன்னிலை வகித்து வந்தார். நந்தியாலா தொகுதியில் ஆளும் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் முன்னிலை பெற்று வந்தார்.

2-ம் கட்ட வாக்கு எண்ணிக்கையில் மனோகர் பாரிக்கர் 2832 வாக்குகள் முன்னிலை பெற்று வந்தார். டெல்லியின் பவானா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சுரேந்தர் குமார் 6-ம் கட்ட வாக்கு எண்ணிக்கையில் 3437 வாக்குகள் முன்னிலை பெற்றார்.

இறுதியில் பனாஜி தொகுதியில் முதல்வர் மனோகர் பாரிக்கர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அவர் மொத்தம் 4803 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கிரீஷ் சோதங்கரை தோற்கடித்தார். 

ஆந்திர பிரதேசத்தின் நந்தியாலா தொகுதியில் ஆளும் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் மொத்தம் 27,466 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உள்ளார்.

டெல்லியின் பவானா தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளர் ராம் சந்தர் வெற்றி பெற்றார். இவர் மொத்தம் 24052 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உள்ளார்.

Trending News