டெல்லியில் இரண்டாயிரம் ரூபாய் நோட்டு கறுப்பு வியாபாரத்தை அம்பலப்படுத்திய ஜீ டிவி

Operation Pink By Zee TV: இரண்டாயிரம் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து நீக்குவதாக மத்திய அரசு அறிவித்தது முதல். இளஞ்சிவப்பு நிற நோட்டுகளாக வைக்கப்பட்ட கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றும் தொழிலும் தொடங்கிவிட்டது

Written by - Malathi Tamilselvan | Last Updated : May 30, 2023, 10:44 PM IST
  • இரண்டாயிரம் ரூபாய் நோட்டு தடை
  • கள்ளச்சந்தை வியாபாரத்தை அம்பலப்படுத்திய ஜீ டிவி
  • ஜீ டிவியின் ஆபரேஷன் பிங்க்
டெல்லியில் இரண்டாயிரம் ரூபாய் நோட்டு கறுப்பு வியாபாரத்தை அம்பலப்படுத்திய ஜீ டிவி title=

நியூடெல்லி: இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளின் கறுப்பு வியாபாரத்தை அம்பலப்படுத்தும் ஜீ டிவியின் மிகப் பெரிய ஆபரேஷன் பிங்க். ரூபாய் நோட்டுகளின் கருப்பு வணிகம் குறித்து ஜீ நியூஸ் மிகப் பெரிய மோசடியை வெளிப்படுத்தியுள்ளது. இரண்டாயிரம் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து நீக்குவதாக மத்திய அரசு அறிவித்தது முதல். இளஞ்சிவப்பு நிற நோட்டுகளாக வைக்கப்பட்ட கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றும் தொழிலும் தொடங்கிவிட்டது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு 2016-ம் ஆண்டு நடந்தது போலவே மக்கள் ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொண்டிருக்கின்றனர். அப்போது, கறுப்புப் பணமாக இருந்த பண நொட்டுகளை மாற்றிக் கொடுப்பவர்களுக்கு அதிர்ஷ்டம் பிரகாசித்ததைப் போலவே, இந்த முறை இரண்டாயிரம் ரூபாய் ரூபாய்களை மாற்றும் முயற்சிகளில் ஈடுபட்டவர்களைப் பற்றிய கதைகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்ற்ன.

இந்த சட்டவிரோத நடவடிக்கைகளை ஜீ நியூஸ் சேனல், தனது ரகசிய கேமராவில் படம் பிடித்துள்ளது.

நாட்டில் உள்ள பல பிரபல நகைக்கடை ஷோரூம்களில், இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளுக்கு மாற்றாக தங்கம் விற்கும் மோசடி ஆட்டம் நடப்பது ஜீ நியூஸுக்கு தெரியவந்தது. வெளியாகியுள்ளது.

பெரிய நகைக்கடைக்காரர்கள், கறுப்புப் பணத்துக்கு ஈடாக தங்கத்தை விற்கத் தயாராகிவிட்டனர். நகைக்கடைக்காரர்கள்... இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளாக பணத்தை வாங்கிக் கொண்டு தங்கத்தை விற்கிறார்கள்.

இரண்டாயிரம் ரூபாய் மூட்டைகளுடன் வரும் மக்களிடம் எவ்வளவு வேண்டுமானாலும் கறுப்புப் பணத்தைக் கொண்டுவருவதாகவும், அதற்குப் பதில் தங்கத்தை எடுத்துச் செல்வதாகவும் உத்தரவாதம் அளிக்கப்படுகிறது.

மேலும் படிக்க - வானிலை ஆய்வு மையத்தின் அலெர்ட்! அதி தீவிர புயல் மோச்சாவின் கோரத் தாண்டவம்

பிராண்ட்- பி.பி. நகை வியாபாரிகள்
கிளை - பிடம்புரா, டெல்லி
தேதி - 25 மே 2023

ஜீ மீடியா நிருபர் அபிஷேக் குமார் ஒரு வாடிக்கையாளரைப் போல் காட்டிக்கொண்டு பிடம்புராவில் உள்ள பிபி ஜூவல்லர்ஸ் கடையை அடைந்தார். அங்கு அவர் இரண்டு பேரை சந்திக்கிறார். வெள்ளை சட்டை அணிந்திருந்த பிபி ஜூவல்லர்ஸ் ஊழியர்கள் அவரை சந்தித்தனர்.  

உரையாடல்

விற்பனையாளர்- சொல்லுங்க... என்ன சார்?
நிருபர்- ஐயா நாணயம்... இப்போ தங்கம் என்ன விலை ?
விற்பனையாளர்- 10 கிராம் 63 ஆயிரம்...
நிருபர் - 63ஆ? ரொக்கமா கொடுத்தா என்ன ரேட்?
விற்பனையாளர் - பணத்தில் பிங்க் இருக்கா?
நிருபர்- அதாவது 2 ஆயிரம் நோட்டு? அதுதானா? 
விற்பனையாளர் - ஆம்
நிருபர்- ஆஹா அற்புதமான கோடிங்... 2 ஆயிரம் நோட்டும் இருக்கு
சேல்ஸ்மேன் - 2 ஆயிரம் என்றால் விலை சற்று அதிகமாக இருக்கும்
சேல்ஸ்மேன் - 66 ஆயிரம்  
நிருபர்- 66 ஆயிரம்ன்னா, எத்தனை அதிகம்?
விற்பனையாளர் - 3 ஆயிரம்

மேலும் படிக்க - வானிலை ஆய்வு மையத்தின் அலெர்ட்! அதி தீவிர புயல் மோச்சாவின் கோரத் தாண்டவம்

உரையாடலின் சாராம்சம்

பிபி ஜூவல்லர்ஸ் சேல்ஸ்மேன் சொன்னதன் பொருள்- 10 கிராம் தங்கத்தின் விலை 63 ஆயிரம் ரூபாய்... ஆனால் 2000 ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து, தங்கம் வாங்கினால். 10 கிராம் தங்கத்தின் விலை 66 ஆயிரம் ரூபாயாக இருக்கும். அதாவது, 2000 ரூபாய் நோட்டுகளை வழங்கும்போது, ​​10 கிராம் தங்கத்திற்கு பிபி ஜூவல்லர்ஸ் ரூ.3000 அதிகமாக வசூலிக்கிறது.

பிபி ஜூவல்லர்ஸ் 2000 நோட்டு என்பதற்கு பிங்க் என்ற குறியீட்டு வார்த்தையை வைத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த குறியீட்டு வார்த்தையை சொன்னால் 2000 ரூபாய் நோட்டு என்பதை புரிந்து கொள்ளுங்கள். மூன்றாயிரம் ரூபாய் அதிக கட்டணம் வசூலிப்பதற்கான காரணத்தையும் கேட்டோம்.

கேள்வியையும் பதிலையும் கேளுங்கள்

நிருபர்- பிங்க் கொடுத்த விலை அதிகமா? ஏன்?
சேல்ஸ்மேன்- நாங்களும் வங்கியில் இப்படி டெபாசிட் செய்ய முடியாது.. பில் கட்ட வேண்டும்.... வாடிக்கையாளரிடம் இருந்து வாங்கியதாக கணக்கு காட்ட வேண்டும்... அதனால் விலை அதிகம்... அதிலயும் தங்க காயின்கள் விலை அதிகம் போகுது... எல்லாரும் ஜூவல்லரியில் முதலீடு செய்யறதை விட காயின்களில் போட விரும்பறாங்க..

இப்படி, நகைக்கடைகளில் இரண்டாயிரம் ரூபாய் நோட்டை தங்க காயினாகவும், நகையாகவும் மாற்றும் வேலை தொடங்கிவிட்டது.

மேலும் படிக்க - நாங்கள் துணை நிற்கிறோம்... போராடும் மல்யுத்த வீராங்கனைகளை சந்தித்த பிரியங்கா காந்தி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News