கொல்கத்தா: மேற்கு வங்க அமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சுப்ரதா முகர்ஜி இன்று காலமானார். கொல்கத்தாவில் உள்ள எஸ்எஸ்கேஎம் மருத்துவமனையில் காலமானார் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உறுதிப்படுத்தியுள்ளார்.
75 வயதான சுப்ரதா முகர்ஜி, மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முகர்ஜி, இன்று மாலை இருதய சிகிச்சை பிரிவின் தீவிர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டார். சிகிச்சை பலனளிக்காமல் மாநில பஞ்சாயத்துத் துறை அமைச்சர் சுப்ரதா முகர்ஜி காலமானார்.
அமைச்சரின் மரணச் செய்தி இரவு 9.22 மணியளவில் அறிவிக்கப்பட்டது. தகவல் தெரிந்து மருத்துவமனைக்கு விரைந்த மாநில அமைச்சர் அரூப் பிஸ்வாஸ் செய்தியாளர்களிடம் சுபர்தா முகர்ஜி காலமான செய்தியை தெரிவித்தார்.
West Bengal minister & senior TMC leader Subrata Mukherjee passes away at SSKM hospital in Kolkata at the age of 75, confirms CM Mamata Banerjee. His mortal remains will be kept at Rabindra Sadan, Kolkata tomorrow morning for people to pay their last respects, says CM
(File pic) pic.twitter.com/F3PjPZK4ZL
— ANI (@ANI) November 4, 2021
மக்களின் இறுதி அஞ்சலிக்காக, அவரது உடல் நாளை காலை கொல்கத்தாவில் உள்ள ரவீந்திர சதானில் வைக்கப்படும். இந்தத் தகவலை மாநில முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
தெற்கு கொல்கத்தாவின் காளிகாட் பகுதியில் உள்ள தனது இல்லத்தில் காளி பூஜை செய்து கொண்டிருந்த முதலமைச்சர் மமதா பானர்ஜி, தனது அமைச்சரவை சகா காலமான செய்தி கேட்டு, அங்கிருந்து உடனடியாக மருத்துவமனைக்கு வந்துவிட்டார்.
"நான் இதயம் உடைந்துவிட்டேன். மாநிலத்திற்கும், கட்சிக்குமான அவரது பங்களிப்பு மகத்தானது. அவர் இல்லை என்று என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை” என்று முதல்வர் மம்தா பானர்ஜி தனது வருத்தத்தைப் பகிந்துக் கொண்டார்.
2000ஆவது ஆண்டு முதல் 2005 வரை கொல்கத்தா மேயராக சுப்ரதா முகர்ஜி பணியாற்றினார். அவரது நிர்வாகத் திறமையின் காரணமாக நகரத்தின் சிறந்த மேயர்களில் ஒருவராக அவர் கருதப்பட்டார்.
Also Read | நவம்பர் 04 தமிழக கொரோனா பாதிப்பு நிலவரம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR