காஷ்மீர் எல்லையில் பணியாற்றும் ராணுவ வீரர்களுக்கு தரமற்ற உணவுகள் வழங்கப்படுவதாக எல்லை பாதுகாப்புபடை வீரரான தேஜ் பகதூர் யாதவ் என்பவர் கடந்த ஜனவரி மாதம் குற்றம் சாட்டினார். இது தொடர்பாக அவர் வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.
தேஜ் பகதூர் யாதவ் ராணுவ விதிகள் மற்றும் நடைமுறைகளை மீறி வீடியோ வெளியிட்டதாக கூறி அவர் மீது விசாரணை கோர்ட்டு விசாரணை நடத்தி வந்தது. இந்த விசாரணையில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாக கோர்ட்டு அறிக்கை தாக்கல் செய்தது.
அதன் பேரில் தேஜ் பகதூர் யாதவை எல்லை பாதுகாப்பு படை நேற்று பணி நீக்கம் செய்தது. இது குறித்து எல்லை பாதுகாப்புபடை மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “தேஜ் பகதூர் யாதவ் தனது பணி நீக்கத்தை எதிர்த்து 3 மாத காலத்துக்குள் அப்பீல் செய்யலாம்” என தெரிவித்தார்.