உத்திர பிரதேசத்தில் (Uttar Pradesh) அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்றில், இன்று (ஆகஸ்ட் 19) காலை ஆக்ராவில் உள்ள நியூ சதர்ன் பைபாஸில் இருந்து அடையாளம் தெரியாத சில குற்றவாளிகளால் பயணிகள் பஸ் (Passenger Bus) ஒன்று கடத்தப்பட்டுள்ளது.
குற்றவாளிகள் ஓட்டுநரையும் பேருந்தின் உதவியாளரையும் கீழே இறக்கி கட்டாயப்படுத்தி வாகனத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றினர். பேருந்து கடத்தப்பட்டபோது 34 பயணிகள் அதில் இருந்ததாக அறியப்படுகிறது.
இந்தப் பேருந்து ஹரியானாவின் குருகிராமில் இருந்து மத்திய பிரதேசத்திற்கு சென்று கொண்டிருந்தது. குற்றவாளிகள் தங்களை ஒரு நிதி நிறுவனத்தின் ஊழியர்களாகக் காட்டிக் கொண்டு பேருந்தை நிறுத்துமாறு டிரைவரிடம் கேட்டதாக ஆதாரங்கள் ஊடகங்களுக்கு தெரிவித்தன.
இந்த விவகாரத்தில் ஆக்ரா போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். மேலும் விசாரணையை மேற்பார்வையிட ஆக்ரா SSP அவ்விடத்திற்கு விரைந்துள்ளார். ஜீ நியூஸுடன் பேசிய SSP, கடத்தல்காரர்கள் தங்களை ஸ்ரீ ராம் நிதி நிறுவனத்தின் ஊழியர்களாகக் காட்டிக்கொண்டதாகத் தெரிவித்தார். பேருந்து தற்போது இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க போலீசார் முயற்சித்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
சம்பவ இடத்திலிருந்தும் விசாரணை குறித்தும் மேலும் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
ALSO READ: Third Umpire: ட்ரோன்கள் சார்ந்த பாதுகாப்பு முறையை அறிமுகம் செய்தது Indian Railways!!