No Toll Tax... இந்த மாநிலத்தில் சுங்க கட்டணத்திற்கு விலக்கு... காரணம் இது தான்

இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளில், ஆங்காங்கே சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு, சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சுங்க சாவடிகளை கடந்து செல்லும் வாகனங்கள் சுங்க கட்டணத்தை செலுத்த வேண்டும்.  

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 15, 2024, 07:43 PM IST
  • இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் டோல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
  • சுங்க கட்டணத்தில் இருந்து 5 விதமான வாகனங்களுக்கு விதிவிலக்கு.
  • சுங்க சாவடிகளை கடந்து செல்லும் வாகனங்கள் சுங்க கட்டணத்தை செலுத்த வேண்டும்.
No Toll Tax... இந்த மாநிலத்தில் சுங்க கட்டணத்திற்கு விலக்கு... காரணம் இது தான் title=

இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளில், ஆங்காங்கே சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு, சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சாலை பராமரிப்பு மற்றும் கட்டுமானத்திற்காக இந்த கட்டணம்  வசூலிக்கப்படுகிறது. இதனால் அந்த சுங்க சாவடிகளை கடந்து செல்லும் வாகனங்கள் சுங்க கட்டணத்தை செலுத்த வேண்டும்.

இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் டோல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் உத்தரபிரதேசத்தில் பயணம் செல்கிறீர்கள் என்றால், இலவசமாக பயணம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். உண்மையில், மகா கும்பமேளா அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அலகாபாத்தில் ஏற்பாடு செய்யப்பட உள்ளது. இதை கருத்தில் கொண்டு உத்தரபிரதேச அரசு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துடன் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

கும்பமேளாவிற்கு பயணிக்க பல சுங்கச்சாவடிகளில் யோகி அரசாங்கம் சுங்க கட்டண சலுகையை அறிவித்துள்ளது. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துடன் இணைந்து யோகி அரசு இந்த முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது. இதன்படி மகாகும்பமேளாவிற்கு வரும் பக்தர்கள் தங்கள் வாகனங்களுக்கு சுங்கவரி செலுத்த வேண்டியதில்லை. யோகி அரசு உத்திர பிரதேசத்தில் உள்ள (Uttar Pradesh) ஏழு சுங்கச்சாவடிகளில் கட்டணமில்லா சலுகையை அறிவித்துள்ளது.

உத்தரபிரதேசத்தில், சித்ரகூட் நெடுஞ்சாலையில் உள்ள உமாபூர் சுங்கச்சாவடி, அயோத்தி நெடுஞ்சாலையில் மவுயிமா சுங்கச்சாவடி, லக்னோ நெடுஞ்சாலையில் அந்தியாரி சுங்கச்சாவடி, மிர்சாபூர் சாலையில் முங்காரி சுங்கச்சாவடி, வாரணாசி சாலையில் உள்ள ஹண்டியா சுங்கச்சாவடி, மற்றும் கான்பூர் சாலையில் கோக்ராஜ் சுங்கச்சாவடி ஆகியவற்றில் மகாகும்பமேளா சமயத்தில் 45 நாட்களுக்கு பக்தர்களிடம் சுங்கவரி வசூலிக்க வேண்டாம் என யோகி அரசு அறிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க | Budget 2025: வருமான வரி விதிகளில் சர்ப்ரைஸ் கொடுக்க தயாராகும் அரசு, காத்திருக்கும் மக்கள்

மகாகும்பமேளாவிற்கு சுமார் 40 கோடி பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகரித்து வரும் பக்தர்களின் வருகையை கருத்தில் கொண்டு வசதிகளை மேம்படுத்த வருகின்றன. பெரும்பாலான பக்தர்கள் தங்கள் சொந்த வாகனங்களில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 55% பக்தர்கள் கார், ஜீப், பேருந்து, லாரி மற்றும் டிராக்டர் மூலமாகவும், 45% பேர் ரயில், சாலை மற்றும் விமானம் மூலமாகவும் வருவார்கள் என மேளா நிர்வாகம் கூறுகிறது. மகாகும்ப மேளாவின் போது 1200 சிறப்பு ரயில்களையும், சுமார் 7000 சாலைப் பேருந்துகளையும் இயக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது.

கூடுதல் தகவல்:

இந்தியாவில், எப்பொழுதுமே சுங்கச்சாவடியை கட்டணம் ஏதும் செலுத்தாமல் கடந்து செல்ல 5 விதமான வாகனங்களுக்கு விதிவிலக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் சுங்க சாவடியை கடந்து செல்லும் போது கட்டணம் ஏதும் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.  ராணுவ வாகனங்கள், அரசு அதிகாரிகள் அல்லது உயர் பதவியில் இருப்பவர்களின் வாகனங்கள், விஐபி வாகனங்கள், அவசர உதவி வாகனங்கள்,  இரு சக்கர வாகனங்கள் ஆகியவற்றுக்கு விதிவிலக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் இந்தியா முழுவதும் உள்ள எந்த சுங்கச்சாவடியை கடந்து சென்றாலும் அதற்கு கட்டணம் செலுத்த வேண்டிய தேவை இல்லை.

மேலும் படிக்க | ஆயுள் சான்றிதழ் நிராகரிக்கப்பட்டால் என்ன செய்வது? ஓய்வூதியம் நிறுத்தப்படுவதை தவிர்க்க வழி என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News