காவிரி நதிநீர் பங்கீடு வழக்கில் நடுவர்மன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பை எதிர்த்து மாநில அரசுகள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தன. இந்த வழக்கின் இறுதி விசாரணை தொடங்கி உள்ளது.
2-வது நாளான நேற்று நடுவர் மன்றம் மீண்டும் காவிரி நதிநீர் பங்கீடு வழக்கை விசாரிக்க வேண்டும் என மாநில அரசுகள் கூறின.
அப்பொழுது நீதிபதிகள் கூறியது,
தாவா சட்டப்படி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டுக்கு முழு அதிகாரம் உள்ளது. எனவே இனி மீண்டும் நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கு நடுவர் மன்றத்துக்கு செல்லாது. எனவே சுப்ரீம் கோர்ட்டே காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கை விசாரிக்கும்.
ஆகவே, இந்த வழக்கு சம்பந்தப்பட்ட ஆவணங்களையும், ஆதாரங்களையும் அடிப்படையாக கொண்டு சுப்ரீம் கோர்ட்டே இறுதி முடிவு எடுக்கும்.