CauveryIssue: கர்நாடகா அனைத்துக் கட்சி கூட்டம் தொடக்கியது!!

காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகாவில் அனைத்துக்கட்சி கூட்டம் முதலமைச்சர் குமாரசாமி தலைமையில் ததுவக்கம்! 

Last Updated : Jun 30, 2018, 12:18 PM IST
CauveryIssue: கர்நாடகா அனைத்துக் கட்சி கூட்டம் தொடக்கியது!! title=

காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகாவில் இன்று அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு முதலமைச்சர் குமாரசாமி அழைப்பு விடுத்துள்ளார்.

உச்சநீதிமன்றம் உத்தரவின்படி காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட 4 மாநிலங்களிலும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், வரும் 2 ஆம் தேி காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதலாவது கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ளது. 

இந்த கூட்டம் ஆணையத்தின் தலைவர் மசூது உசைன் தலைமையில் கூடுகிறது. இதனை முன்னிட்டு, கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, காவிரி குறித்த ஆலோசனைக்காக அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். 

முன்னதாக, காவிரி மேலாண்மை வாரியத்தின் முதலாவது கூட்டம் தொடர்பாக நேற்று தமிழகத்தில் முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது!

 

Trending News