Class 12th Board Exams: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) திங்கள்கிழமை (ஜூன் 21, 2021) உச்சநீதிமன்றத்தில் கூடுதல் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்து, 12 ஆம் வகுப்பு வாரியத் தேர்வுகளுக்கான முடிவுகள் ஜூலை 31 ஆம் தேதிக்குள் அறிவிக்கப்படும் என்றும், விருப்பத்தேர்வு ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையில் நடத்தலாம் எனவும் தெரிவித்துள்ளது.
தற்போது பின்பற்றப்படும், மதிப்பெண் கணக்கீட்டு முறையில் திருப்தி அடையாத மாணவர்களுக்கான விருப்பத் தேர்வுகள் 2021 ஆகஸ்ட் 15 முதல் 2021 செப்டம்பர் 15 வரை எந்த நேரத்திலும் நடத்தப்படும் என்று சிபிஎஸ்இ தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது. "தேர்வுகளை நடத்துவதற்கான உகந்த சூழ்நிலை ஏற்படும் போது, முக்கிய பாடங்களுக்கு மட்டுமே தேர்வு நடத்தப்படும்" என சிபிஎஸ்இ (CBSE) கூறியுள்ளது.
ALSO READ | மதிப்பீட்டில் திருப்தி இல்லை என்றால் மாணவர்கள் தேர்வு எழுதலாம்: CBSE செயலாளர்
ஜூலை 31-ம் தேதி 12-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, விருப்பத் தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பது தொடர்பான விவரங்களை சிபிஎஸ்இ வெளியிடும்.
இந்த மாத தொடக்கத்தில், சிபிஎஸ்இ (CBSE) 12வது பொது தேர்வுகள் தொடர்பாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) அறிவித்தார்.
முன்னதாக, கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவ தொடங்கியதை அடுத்து, CBSE 10 ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்வதாகவும், 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை (CBSE Board Exams) ஒத்திவைப்பதாகவும், மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | BREAKING: 12-ஆம் வகுப்பு மதிப்பெண் கணக்கிடும் முறை குறித்து சிபிஎஸ்இ விளக்கம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR