BREAKING: 12-ஆம் வகுப்பு மதிப்பெண் கணக்கிடும் முறை குறித்து சிபிஎஸ்இ விளக்கம்

CBSE 12 Class Result Method: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) தரப்பில், இன்று உச்ச நீதிமன்றத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிப்பெண் குறித்து விளக்கம் அளித்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 17, 2021, 12:32 PM IST
BREAKING: 12-ஆம் வகுப்பு மதிப்பெண் கணக்கிடும் முறை குறித்து சிபிஎஸ்இ விளக்கம்  title=

CBSE 12 Class Result Method: தற்போதைய கொரோனா தொற்றுநோய் சூழ்நிலை காரணமாக, இந்த ஆண்டுக்கான சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு வாரிய தேர்வுகள் 2021 ரத்து செய்யப்பட்டுள்ளதால், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) தரப்பில், இன்று உச்ச நீதிமன்றத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிப்பெண் குறித்து விளக்கம் அளித்துள்ளது.

இந்த ஆண்டு 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் வழங்குவது குறித்து இறுதி செய்ய 13 பேர் கொண்ட குழுவை சிபிஎஸ்இ (CBSE) அமைத்தது. மேலும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் அளவுகோல் திட்டத்தை தாக்கல் செய்ய இரண்டு வார கால அவகாசம் உச்சநீதிமன்றம் அளித்திருந்தது.

இந்நிலையில், இன்று 12-ஆம் வகுப்பு தேர்வு ரத்து மற்றும் மதிப்பெண் வழங்கும் திட்டம் குறித்து உச்சநீதிமன்றத்தில் சிபிஎஸ்இ விளக்கம் அளித்துள்ளது.

மதிப்பெண் வழங்கும் திட்டம் குறித்து தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் கூறியது, 

- 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 3 பாடங்கள் கணக்கில் கொள்ளப்படும்.

- 11 ஆம் வகுப்பு பாடங்களில் 30% வெயிட்டேஜ் மதிப்பெண்களும் கணக்கில் கொள்ளப்படும்

- 12 ஆம் வகுப்பு பாடங்களில் 40% வெயிட்டேஜ் மதிப்பெண்களும் கணக்கில் கொள்ளப்படும்

- செய்முறைத் தேர்வுக்கு முழு மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படும்.

ALSO READ | CBSE Class 12 Latest News: பொதுத்தேர்வு இல்லாத நிலையில் மதிப்பெண்கள் எப்படி போடப்படும்?

அதாவது, 10 ஆம் வகுப்பு, 11 ஆம் வகுப்பு பாடங்களில் 30 சதவிகித வெயிட்டேஜ் மற்றும் 12 ஆம் வகுப்பு பாடங்களில் 40 சதவிகித வெயிட்டேஜ் மதிப்பெண் செயல்திறன் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். 10, 11 வகுப்பு தேர்வு எழுதிய ஐந்து தாள்களில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மூன்றை பரிசீலிக்கப்படும் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.

CBSE Explanation on class 12 results evaluation method

ALSO READ | CBSE 12ம் வகுப்பு பொது தேர்வுகள் ரத்து- முழு விவரம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News