J&K-வில் கூடுதலாக 10,000 பாதுகாப்பு படை வீரர்கள்; மெஹ்பூபா முஃப்தி கண்டனம்!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கூடுதலாக 10 ஆயிரம் பாதுகாப்பு படை வீரர்களை அனுப்ப மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது!!

Last Updated : Jul 27, 2019, 02:11 PM IST
J&K-வில் கூடுதலாக 10,000 பாதுகாப்பு படை வீரர்கள்; மெஹ்பூபா முஃப்தி கண்டனம்! title=

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கூடுதலாக 10 ஆயிரம் பாதுகாப்பு படை வீரர்களை அனுப்ப மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது!!

தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த திடீர் முடிவாக 10,000 துணை ராணுவப் படையினரை ஜம்மு-காஷ்மீருக்கு அனுப்பியுள்ளது மத்திய பாதுகாப்பு அமைச்சகம். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் காஷ்மீரில் இரு நாட்களாக தங்கியிருந்து பாதுகாப்பு தொடர்பாக ஆய்வு நடத்தி வந்தார். மூத்த அதிகாரிகளைச் சந்தித்து மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமையை பரிசீலனை செய்தார். முன்பு இல்லாத அளவுக்கு 100 கம்பெனி பாதுகாப்பு படை வீரர்களை ஜம்மு காஷ்மீருக்கு அனுப்புவதற்கு உள்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கியது.

இதன் மூலம் அங்கு புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டிருக்கலாம் என யூகங்கள் எழுந்துள்ளன. அதே சமயம் இந்த நடவடிக்கை குறித்து அச்சப்பட தேவையில்லை என தெரிவித்துள்ள உள்துறை அமைச்சகம், ஜம்மு காஷ்மீரில் சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்தவும், பாதுகாப்பு கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கத்திலும் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. 

இது குறித்து மெஹபூபா முப்தி ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள குறிப்பில்; பள்ளத்தாக்குக்கு கூடுதலாக 10,000 பாதுகாப்பு படை வீரர்களை அனுப்ப மையத்தின் முடிவு மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கு பஞ்சமில்லை. J&K என்பது ஒரு அரசியல் பிரச்சினை, இது இராணுவ வழிமுறைகளால் தீர்க்கப்படாது. GOI அதன் கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என பதிவிட்டுள்ளார். 

மேலும், வடக்கு காஷ்மீரில் ராணுவத்தினர் எண்ணிக்கை குறைவாக உள்ளது, அதனால்தான் எங்களுக்கு கூடுதல் படைகள் தேவைப்பட்டது. 100 கம்பெனி துணை ராணுவத்தினர் விமானத்தில் அனுப்பப்பட்டுள்ளனர் என தில்பாக் சிங் தெரிவித்துள்ளார். ஒரு கம்பெனி என்பது, தலா 100 ராணுவ வீரர்களை உள்ளடக்கியதாகும். சமீபத்தில், அமர்நாத் யாத்திரை பாதுகாப்புக்காக சுமார் 40,000 கூடுதல் மத்திய துணை ராணுவப் படையினர் காஷ்மீர் அழைத்து வரப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Trending News