நக்சலைட்டுகளுடன் நடந்த தாக்குதலில் வீரமரணமடைந்த சிஆர்பிஎஃப் வீரர்களில் ஒருவரான சந்திரா எச்எஸ் உடலுக்கு கர்நாடகா மாநிலம் ஹசன் பகுதியில் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.
சமீப காலமாக பாதுகாப்பு படையினருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையே தொடர் மோதல் ஏற்ப்பட்டு வருகிறது.
அதில் ஒரு பகுதியாக தற்போது, சத்தீஸ்கரில் உள்ள சுக்மாவில் பாதுகாப்பு படையினர் நக்சலைட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
பாதுகாப்பு படையினர் நக்சலைட்டுகள் பதுங்கி இருந்த இடத்திற்கு சென்றனர். அப்போது பாதுகாப்பு படையினர் மீது நக்சலைட்டுகள் திடீரென தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இதில் நக்சலைட்டுகல் பாதுகாப்பு படையினரின் வாகனம் ஒன்றின் மீது வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் குறைந்தபட்சம் 9 சிஆர்பிஎஃப் ஊழியர்கள் உயிரிழந்தனர். மேலும் வெடிகுண்டு தாக்குதலால் பொதுமக்கள் 10 பேர் காயமடைந்துள்ளனர்.
இதனையடுத்து அந்த பகுதி முழுவதும் இராணுவ வீர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது.
#Karnataka: Wreath laying ceremony of CRPF's Chandra HS in Hassan. He had lost his life in #Sukma naxal attack on 13 March. pic.twitter.com/E85O3De40D
— ANI (@ANI) March 15, 2018