உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் காஸ்கஞ்ச் நகரில் ஏற்பட்ட கலவரத்தில் கொல்லப்பட்ட சந்தன் குப்தா வீட்டின் மாடியில் 50 அடி உயரமுள்ள தேசியக் கொடி பறக்கவிடப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலம் காஸ்கஞ்ச் நகரில் குடியரசு தினத்தன்று விஷ்வ இந்து பரிஷத், ஏ.பி.வி.பி. உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து, ‘திரங்கா யாத்ரா’ என்ற பெயரில் இருசக்கர வாகனப் பேரணி நடத்தின.
50 feet high Tri-colour unfurled on the terrace of #ChandanGupta's residence. #Kasganjclashes pic.twitter.com/jQbd6YwTZs
— ANI UP (@ANINewsUP) February 7, 2018
இந்த பேரணியின் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்ப்பட்டது. இரு தரப்பினரும் கற்களை வீசியும், துப்பாக்கிசூடு நடத்தியும் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பேரணியில் வந்த சந்தன் குப்தா என்ற இளைஞர் கொல்லப்பட்டார்.
தற்போது, அந்த தாக்குதலில் கொல்லப்பட்ட சந்தன் குப்தா என்ற இளைஞரின் வீட்டின் மாடியில் 50 அடி உயரமுள்ள தேசியக் கொடி பறக்கவிடப்பட்டுள்ளது.