காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்களை இன்று ராகுல்காந்தி சந்தித்து தலைவர் பதவியில் தொடருமாறு வலியுறுத்தல்!!
மக்களவை தேர்தல் தோல்விக்கு பிறகு, காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலக போவதாக ராகுல்காந்தி தொடர்ந்து தெரிவித்து வருகிறார். ஆனால அவரின் முடிவை காங்கிரஸின் மூத்த தலைவர்கள் பலரும் ஏற்காத ராகுல் தனது முடிவில் அவர் விடாப்பிடியாக உள்ளார். மேலும், இதுதொடர்பாக நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்திலும் தனது நிலைப்பாட்டை தெரிவித்த ராகுல், அசோக் கெல்லாட், கமல்நாத் ஆகியோர் கட்சியை விட தங்கள் மகன்களுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கின்றனர் என்று கூறியதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்களை இன்று ராகுல் காந்தி சந்திக்க உள்ளார். ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், மத்திய பிரதேச முதலமைச்சர் கமல்நாத், பஞ்சாப் முதலமைச்சர் அமரேந்தர் சிங், சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் சிங் பாகல் மற்றும் புதுச்சேரி முதலமைச்சர் நாராயண சாமி ஆகியோர் இன்று மதியம் ராகுலை சந்திக்க உள்ளனர்.
இந்த சந்திப்பிற்கான நோக்கம் குறித்து தெளிவான தகவல் வெளியாகத நிலையில், அண்மையில் முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் மோசமான செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. குறிப்பாக, சட்டமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்ற இந்தி பேசும் மாநிலங்களில் கூட காங்கிரஸ் கட்சி தோல்வி குறித்தும் ஆலோசிக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.