மும்பையில் செருப்பில் தங்க கட்டிகள் கடத்தி வந்த நபர் கைது!

மும்பை சர்வதேச விமான நிலையத்தில் தங்கத்தினை செருப்பில் வைத்து கடத்திய நபரை CISF அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 

Last Updated : Apr 5, 2019, 09:45 AM IST
மும்பையில் செருப்பில் தங்க கட்டிகள் கடத்தி வந்த நபர் கைது! title=

மும்பை சர்வதேச விமான நிலையத்தில் தங்கத்தினை செருப்பில் வைத்து கடத்திய நபரை CISF அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 

 

 

மும்பை  சர்வதேச விமான நிலையத்தில் இன்று காலை CISF அதிகாரிகள் வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அங்கு நின்றுக் கொண்டிருந்த பயணியின் நடவடிக்கையில் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. 

இந்நிலையில் அந்த நபரின் உடமைகளை முழுமையாக சோதனையிட்டனர். சோதனையில் அந்த நபர், 2 தங்க கட்டிகளை அணிந்திருந்த காலணிகளில் மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பிடிபட்ட தங்க கட்டிகள் 381 கிராம் எடை கொண்டது. தற்போது  இதுகுறித்து CISF அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Trending News