மேற்குவங்க மாநிலத்தில் கவர்னர் மற்றும் அரசு இடையேலான மோதல் தீவிரம் அடைந்துள்ளது.
தற்போது மேற்குவங்கத்தில் கவர்னராக கே.என். திரிபாதி உள்ளார். அவருக்கும், மேற்குவங்கத்தில் ஆட்சியில் இருக்கும் மம்தா பானர்ஜி அரசுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக மோதல் ஏற்பட்டு உள்ளது. மம்தா பானர்ஜி அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் பலரும் கவர்னரை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டு வந்தனர்.
தற்போது இந்த மோதல் மேற்குவங்கத்தில் உச்சத்தை எட்டியுள்ளது. மால்டா மாவட்ட அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளுடன் வளர்ச்சிப்பணிகள், சட்டம் ஒழுங்கு குறித்து .நேற்று முன்தினம் கவர்னர் திரிபாதி ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், மாநில மூத்த அமைச்சர் பர்தா சாட்டர்ஜி தலைமையிலான 30 திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் ஒன்றாக கோடி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை சந்தித்து கவர்னராக கே.என். திரிபாதி நடவடிக்கை குறித்து பேசினார். பின்னர் கவர்னர் திரிபாதி இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மீறுவது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல என புகார் கூறினார்கள்.
இது குறித்து கவர்னர் கே.என். திரிபாதி கூறுகையில், கவர்னர் மீது இந்த அரசு சேற்றை வாரி இறைக்க வேண்டாம், மற்றவர்கள் மீது சேற்றை வாரி இறக்கும் முன்பு, அவர்கள் ஒருமுறை கண்ணாடியில் தங்கள் முகத்தை பார்த்து, தான் முகத்தில் இருந்து அழுக்கை அகற்ற வேண்டும் என கூறியுள்ளார்.