ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் BJP-யை எதிர்க்க கைகோர்க்கும் காங்., BSP...

ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் பாஜகவை எதிர்த்துப் போராட காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணியில் போட்டியிடுவதாக தகவல்!!

Last Updated : Sep 9, 2019, 09:45 AM IST
ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் BJP-யை எதிர்க்க கைகோர்க்கும் காங்., BSP... title=

ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் பாஜகவை எதிர்த்துப் போராட காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணியில் போட்டியிடுவதாக தகவல்!!

ஹரியானாவில், முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான பாஜக-வின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அம்மாநில சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. இதன் முதல் கட்டமாக நேற்று ரோட்டக்கில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டு பிரச்சாரத்தை தொடங்கி வைத்து உரையாற்றினார்.

இந்நிலையில், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் காங்கிரசுக்கும் பகுஜன் சமாஜ் கட்சிக்கும் (BSP) இடையிலான கூட்டணி ஹரியானாவிலும் தொடர வாய்ப்புள்ளதாக வட்டாரங்கள் ஜீ நியூஸிடம் தகவல் தெரிவித்துள்ளது. ஹரியானாவின் முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் குமாரி செல்ஜா ஆகியோர் இது தொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியை ஞாயிற்றுக்கிழமை இரவு சந்தித்தனர். இந்த சந்திப்பு ஹரியானாவில் புதிய அரசியல் சமன்பாடுகளின் ஊகங்களைத் தூண்டியுள்ளது.

ஹரியானாவில் மொத்தம் உள்ள 90 சட்டசபை தொகுதிகளிலும் துஷ்யந்த் சவுதாலாவின் ஜனநாயக் ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடப் போவதாக பகுஜன் சமாஜ் கட்சி அறிவித்தது. இதனையடுத்து, தொகுதிப்பங்கீட்டில் உடன்பாடு எட்டாததை அடுத்து, பகுஜன் சமாஜ் கட்சி தனித்துப் போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் மாயாவதி அறிவித்தது குறிப்பிடத்தக்கது. 

 

Trending News