வாரணாசி தொகுதியில் கட்சி தலைமை தன்னை போட்டியிட அழைத்தால் மகிழ்ச்சி என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்!
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு ஆதரவாக கேரளாவின் வயநாட்டு தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட பிரியங்கா காந்தி இன்று செய்தியாளர்கள் சந்திப்பில், உத்திரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் கட்சி தலைமை தன்னை போட்டியிட அழைத்தால் தான் மகிழ்ச்சி அடைவேன் என குறிப்பிட்டுள்ளார். வாரணாசி தொகுதியில் பாஜக சார்பில் பிரதமர் மோடி போட்டியிடவுள்ளது குறிப்பிடத்தக்கது.
கேரளாவில் இரண்டு நாள் பிரச்சார பயணம் மேற்கொண்ட பிரியங்கா, தனது பிரச்சாரத்தின் போது ஆளும் கட்சியை கடுமையாக விமர்சித்து பிரச்சாரம் மேற்கொண்டார். மேலும் பிரதமர் மோடியின் வாக்குறுதிகள், பொய் பிரச்சாரங்கள் என பல விஷயங்களை குறிப்பிட்டு பிரதமர் மோடியை கடைமையாக விமர்சித்தார்.
Priyanka Gandhi Vadra on being asked if she will be contesting from Varanasi: If Congress President asks me to contest, I will be happy to contest. #LokSabhaElections2019 pic.twitter.com/rbMagjccOF
— ANI (@ANI) April 21, 2019
இதற்கிடையில் பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசியில் பிரியகங்கா களமிறக்கப்படலாம் என தகவல்கள் வெளியானது. இந்நிலையில் இன்று செய்தியாளர் சந்திப்பில் பிரியங்கா தனது விருப்பத்தினையும் உறுதி படுத்தியுள்ளார்.
கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி காங்கிரஸ் தொண்டர்கள் பிரியங்கா காந்தியை ரெய்பிரேலி அல்லது அமோதி தொகுதியில் போட்டியிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்ததாகவும், ஆனால் பிரியங்கா மோடிக்கு எதிராக வாரணாசி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்தாகவும் தெரிகிறது. எனினும் இறுதி அறிவிப்பு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வசம் இருந்தே வெளியாகும் எனவும் நம்பிக்கைகுறிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
முன்னதாக கடந்த மார்ச் மாதம் கட்சி தொண்டர்களுடன் பிரியங்கா கலந்துரையாடல் நடத்திய போது, ரெய்பிரேலி அல்லது அமோதி தொகுதியில் பிரியங்கா போட்டியிட்டு வெற்றி பெற்றால் பாஜக ஆட்சிக்கு முடிவுக்கு வந்துவிடும் என தெரிவித்ததாகவும், அதற்கு ஏன் வாரணாசி தொகுதியில் போட்டியிட கூடாதா? என கேள்வி எழுப்பியதாகவும் தெரிகிறது.
காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி சமீபத்தில் கட்சி விருப்பப்பட்டால் தான் மக்களவை தேர்தலில் போட்டியிட தயாராக இருப்பதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது வாரணாசி தொகுதியில் கட்சி தலைமை தன்னை போட்டியிட அழைத்தால் மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார்.
வாரணாசி தொகுதியில் தற்போது பிரதமர் மோடி மக்களவை உறுப்பினராக உள்ளார். கடந்த 2014-ஆம் ஆண்டு தேர்தலில் அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஆம் ஆத்மி வேட்பாளர் அரவிந்த் கேஜிரிவால் தோற்கடித்து 3,71,784 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.