காங்கிரஸ் கட்சியினர் மத்திய பிரதேசத்தில் இன்று ஆர்ப்பாட்டம்!

  மத்திய பிரதேசத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு நிலைமைக்கு எதிராக காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவிக்கிறது

Last Updated : Nov 23, 2017, 03:34 PM IST
காங்கிரஸ் கட்சியினர் மத்திய பிரதேசத்தில் இன்று ஆர்ப்பாட்டம்! title=

மத்திய பிரதேச மாநிலத்தில் சிவராஜ்சிங் சவுகான் தலைமையில் பாரதிய ஜனதா ஆட்சி நடை பெற்று வருகிறது. அங்குள்ள சாட்னா மாவட்டம் சித்ர கூட் சட்டசபை தொகுதிக்கான இடைதேர்தல் கடந்த 9-ந்தேதி நடந்தது. அந்த தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ. பிரேம்சிங் மரணம் அடைந்ததை தொடர்ந்து இடைதேர்தல் நடைபெற்றது. 

கடந்த நவம்பர் 9-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், மொத்தம் 65 சதவீத வாக்குகள் பதிவாகின. காங்கிரஸ் தரப்பில் நிலான்ஷு சதுர்வேதி போட்டியிட்ட நிலையில், பா.ஜ.க. சார்பில் சங்கர்லால் திரிபாதி போட்டியிட்டார். மொத்தம் 12 வேட்பாளர்கள் போட்டியிட்ட போதிலும், காங்கிரஸ், பா.ஜ.க. இடையே தான் கடும் போட்டி நிலவியது.

இதில் காங்கிரஸ் வெற்றி பெற்று தொகுதியை தக்க வைத்துக் கொண்டது. காங்கிரசுக்கு 66,810 ஓட்டுகளும், பாரதிய ஜனதாவுக்கு 52,677 ஓட்டுகளும் கிடைத்தன.

இந்நிலையில் இன்று காலை மத்தியப் பிரதேசத்தில் நிலவும் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமைக்கு எதிராக காங்கிரஸ் கட்ச்சியினர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை போலீஸார் தண்ணீர் கன்னையை பயன்படுத்தி, போராடத்தை கலைத்தனர். 

Trending News