நாட்டை தவறான பாதைக்கு திசை திருப்பும் ராகுல் -நிர்மலா சீதாராமன்!

இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிட் ஒப்பந்தம் விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாட்டை தவறான பாதைக்கு திசை திருப்புகின்றார் என பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்!

Last Updated : Jan 6, 2019, 06:00 PM IST
நாட்டை தவறான பாதைக்கு திசை திருப்பும் ராகுல் -நிர்மலா சீதாராமன்! title=

இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிட் ஒப்பந்தம் விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாட்டை தவறான பாதைக்கு திசை திருப்புகின்றார் என பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்!

முன்னதாக நாடாளுமன்றத்தில், இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிட் (HAL) நிறுவனத்துடன் ஒரு லட்சம் கோடிக்கு அரசு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். பாதுகாப்பு துறை அமைச்சரின் கூற்று பொய் எனவும், ஒருவேலை உண்மையாக இருக்கும் பட்சத்தில் அதற்கான ஆதாரங்களை அவர் வெளிப்படுத்த வேண்டும், அல்லது பதவியில் இருந்து விலக வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

ஆளும் பாஜக அரசிற்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே தற்போது ரபேல் ஒப்பந்தம் தொடர்பான வாக்குவாதங்கள் முற்றி வருகின்றது. இந்நிலையில் தற்போது நடைப்பெற்று வரும் குளிர்கால கூட்டத்தொடரில் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்துக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு ஒப்பந்தங்கள் அளித்துள்ளதாகத் தெரிவித்தார்.

பாதுகாப்பு துறை அமைச்சரின் வாதத்தினை குறிப்பிட்டு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது...

"பாதுகாப்புத்துறை அமைச்சர் ஒரு பொய் கூறினால், அதைத் தொடர்ந்து அந்த ஒரு பொய்யை மறைக்க, காப்பாற்றப் பல பொய்களைக் கூற வேண்டியுள்ளது. அந்த வைகயில் பிரதமர் மோடியின் ரபேல் பொய்களை மறைக்க நிர்மலா ஆர்வமாக இருக்கிறார். இதன் காரணமாகவே நாடாளுமன்றத்தில் நிர்மலா பொய் தெரிவித்துள்ளார். 

நாளை நாடாளுமன்றத்தில் HAL  நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ஒரு லட்சம் கோடிக்கான ஆர்டர்கள் குறித்த ஆவணங்களைக் கண்டிப்பாக தாக்கல் செய்ய வேண்டும். அல்லது பாதுகாப்பு துறை அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துவிடுங்கள்" என குறிப்பிட்டு இருந்தார்.

இந்நிலையில் ராகுல் காந்தியின் இந்த ட்விட்டர் பதிவிற்கு பதில் அளிக்கும் வகையில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள், HAL ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்களை வெளியிட்டுள்ளார். மேலும் நாட்டு மக்களை தவறான செய்திகளால் தவறான திசைக்கு திருப்பும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெட்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Trending News