70_ஆவது ஆண்டு இந்திய அரசியலமைப்பு தினக் கொண்டாட்டம்!!!

நவம்பர் 26 ஆம் தேதியான இன்று இந்திய அரசியலமைப்பு தினமாக கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது!!

Last Updated : Nov 26, 2019, 12:31 PM IST
70_ஆவது ஆண்டு இந்திய அரசியலமைப்பு தினக் கொண்டாட்டம்!!! title=

நவம்பர் 26 ஆம் தேதியான இன்று இந்திய அரசியலமைப்பு தினமாக கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது!!

இந்திய அரசியலமைப்பு சட்ட தினம், 2015-ஆம் ஆண்டிலிருந்து கொண்டாடப்பட்டு வருகிறது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்குவதற்கான பணிகள், 1946-ஆம் ஆண்டு டிசம்பர் 9 ஆம் தேதி தொடங்கப்பட்டது.

நமது நாடு விடுதலை அடைவதற்கு முன்னர் 1946 டிசம்பர் 9 ஆம் தேதி இந்திய அரசியமைப்புச் சட்டத்தை உருவாக்கும் பணிகள் துவங்கியது. இதற்கான அரசியல் நிர்ணய சபை 296 உறுப்பினர்களுடன் இயங்கியது. முதலில் இந்த குழுவில் டாக்டர் அம்பேக்தர் இடம்பெறவில்லை. கிழக்கு வங்கத்தைச் சேர்ந்த யோகேந்தரநாத் மண்டல் என்பவர் நிர்ணய சபையிலிருந்து வெளியேறியதால், அவருடைய இடத்திற்கு அம்பேத்கர் வந்தார்.

மேலும் படிக்க: பெரும்பான்மையை நிரூபிக்க பாஜக அரசுக்கு ஒரு நாள் கெடு...

நாடு விடுதலை பெற்ற பின்னர் 1947 ஆகஸ்ட் 29-லில் அரசியல் நிர்ணய சபை நிறைவேற்றிய தீர்மானத்தின் படி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை எழுதஅம்பேத்கர் தலைமையில் ஏழு பேர் கொண்ட அரசியலமைப்புச் சட்ட வரைவுக் குழு உருவாக்கப்பட்டது. இக்குழுவில் கோபால்சாமி ஐயங்கார், அல்லாடி கிருஷ்ணமூர்த்தி, கே.எம்.முன்ஷி, சையது முகமது சாதுல்லா, மாதவராவ், டி.பி.கைதான் ஆகியோர் இடம்பெற்றனர். இந்த குழு சுமார் 166 முறை கூடி ஆலோசித்து அறிக்கையை தயாரித்தது

பின்னர் இந்த குழு தனது அறிக்கையை 1948, பிப்ரவரி 21 ல் சமர்ப்பித்தது. அதன் பின்னர் நவம்பர் 4 ஆம் தேதி அரசியல் நிர்ணய மன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட இவ்வறிக்கை, முழுமை பெற்று 1949 நவம்பர் 26 ஆம் தேதி அரசியல் நிர்ணய மன்றத்தின் தலைவர் ராஜேந்திர பிரசாத்தின் ஒப்புதலை பெற்றது. அதனை தொடர்ந்து 1950 ஜனவரி 24-லில் நடைபெற்ற அரசியல் நிர்ணய மன்ற கடைசிக் கூட்டத்தில் சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராக ராஜேந்திர பிரசாத் தேர்வானார். 

மேலும் படிக்க: அடுத்தாண்டு வெளியாகும் iPhone 12; விலை $399 மட்டுமே...

இந்திய தேசியக் காங்கிரஸ் மாநாட்டில் 1950, ஜனவரி 26, இந்திய நாட்டின் குடியரசு நாளாக அறிவிக்கப்பட்டு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை நமக்கு நாமே அர்ப்பணிப்பது என்று தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, ஜனவரி 26 -ஆம் தேதியை, இந்தியக் குடியரசு நாளாக ஏற்பதென்றும், அரசியல் நிர்ணய மன்றம் முடிவெடுத்தது. அன்றே இந்திய அரசியலமைப்புச் சட்டம், இந்தியக் குடியரசு தினத்தில் நடைமுறைக்கு வந்தது நினைவுகூரத்தக்கது. 

 

Trending News