பல விஷயங்களில் சர்ச்சை ஏற்படுத்தி வரும் இந்தி நடிகை ராக்கி சாவந்த், பிரதமர் மோடி புகைப்படத்துடன் கூடிய உடையை அணிந்தது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளார்.
அமெரிக்காவின் இலினாய்ஸ் மாகாணத்தில் வசிக்கும் இந்தியர்கள் சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்தனர். விழாவிற்கு நடிகை ராக்கி சாவந்திற்கு அழைப்பு விடுத்தனர். விழாவிற்கு வந்த ராக்கி சாவந்தை பார்த்ததும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும், விழாவில் கலந்து கொண்டவர்களும் அதிர்ச்சியடைந்தனர். பிரதமர் மோடியின் தீவிர ரசிகையான ராக்கி சாவந்த், கவர்ச்சி ஆடையணிந்து வந்ததுடன், உடையில் பிரதமர் மோடியின் புகைப்படங்களை பல இடங்களில் இடம் பெற வைத்திருந்தார். இது அங்கிருந்தவர்களை அதிர்ச்சியடைய வைத்தது.