வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு!

வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.6.52 குறைந்தது; மானியமில்லாத சிலிண்டர் விலை ரூ.133 குறைப்பு

ZEE Bureau ZH Web (தமிழ்) | Updated: Nov 30, 2018, 07:27 PM IST
வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு!
Representational Image

வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.6.52 குறைந்தது; மானியமில்லாத சிலிண்டர் விலை ரூ.133 குறைப்பு

சமையல் எரிவாயுவின் விலையை மாதம்தோறும் எண்ணெய் நிறுவனகள் மாற்றியமைத்து வருகின்றனர். நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாள் தோறும் உயர்த்தப்படும். சமையல் எரிவாயுவின் விலையை மாதம்தோறும் எண்ணெய் நிறுவனகள் மாற்றியமைத்து வருகின்றனர். இந்நிலையில், நாளை மாதத்தின் முதல்நாளையடுத்து இந்த விலை மாற்றத்தை அறிவித்துள்ளது.   

இது குறித்து இந்தியன் ஓயில் நிறுவனம் சமையல் எரிவாயுவின் விலையை நினயித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், பெட்ரோல், டீசல் விலையுயர்வை தொடர்ந்து சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையும் உயர்ந்து வருகிறது. அண்மையில், சிலிண்டர் விநியோகம் செய்பவர்களுக்கு வழங்கப்படும் கமிஷன் தொகை ரூ.48.49-லிருந்து ரூ.50.58-ஆக உயர்ந்தப்பட்டது. 

இந்நிலையில், மானியம் அல்லாத வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 942 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது மானியம் அல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் 133 குறைக்கப்பட்டுள்ளது. 14. 2 கிலோ எடைக்கொண்ட மானிய சிலிண்டரின் விலை ரூ. 507 என அறிவிக்கப்பட்டுள்ளது.