புது டெல்லி: உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் (Coronavirus) ஆதிக்கம் காணப்படுகிறது. கொடிய வைரஸான கொரோனோ ஈரானில் ஒரு தொற்றுநோயின் வடிவத்தை எடுத்துள்ளது. மேலும் 147 பேர் அங்கு இறந்துள்ளதால், ஈரானில் (Iran) கொரோனா காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 1,135 ஐ எட்டியுள்ளது.
வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களைப் பற்றி பேசுகையில், ஈரானில் வசிக்கும் இந்தியர்களுக்கு தான் கொரோனா நோய் அதிகம் பதிவாகியுள்ளன. வெளிநாடுகளில் 276 இந்தியர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் மக்களவையில் (Lok Sabha) தெரிவித்துள்ளது. இதில் அதிக அளவில் 255 இந்தியர்களில் ஈரானில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் வெளிநாடுகளில் வசிக்கும் அதிகமான இந்தியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெளிவாகிறது, ஈரானுக்குப் பிறகு 12 இந்தியர்கள் யு.ஏ.இ. (UAE) நாட்டில் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.
வெளிவிவகார அமைச்சர் வி முரளிதரன் (V Muraleedharan) புதன்கிழமை மக்களவையில் இந்த தகவலை வழங்கியுள்ளார். மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு எழுத்துபூர்வமாக அளித்த பதிலில், தற்போது வெளிநாடுகளில் 276 இந்தியர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்பட்டு உள்ளது. ஈரானில் 255 பேர் என அதிக அளவில் உள்ளனர். இது தவிர, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ) இல் 12 இந்தியர்கள், இத்தாலியில் 5 பேர், ஹாங்காங், குவைத், ருவாண்டா மற்றும் இலங்கையில் தலா ஒருவர் இந்த தீவிர வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஈரானில் இருந்து 53 இந்தியர்களில் நான்காவது முறையாக திங்களன்று இந்தியா திரும்பியதாகவும், இதன் மூலம் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஈரான் நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட மொத்த எண்ணிக்கை 389 ஆக அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறினார்.