மத ஒற்றுமையை குலைப்பதாக கங்கனா மீது மும்பை போலீஸ் வழக்கு பதிவு செய்யவும்: நீதிமன்றம்

கங்கனா மற்றும் அவரது சகோதரி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய மும்பை போலீசார் மறுத்ததை அடுத்து பாலிவுட் இயக்குனர் முன்னவர்லால் சாஹில் ஆஷரபாலி சயீத் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 17, 2020, 04:31 PM IST
  • கங்கனா மற்றும் அவரது சகோதரி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய மும்பை போலீசார் மறுத்ததை அடுத்து பாலிவுட் இயக்குனர் முன்னவர்லால் சாஹில் ஆஷரபாலி சயீத் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
  • கங்கனா ரனாவத் மற்றும் அவரது சகோதரியின் தொடர்ச்சியான சமூக ஊடக பதிவுகள் பாலிவுட் பெயரை கெடுக்கிறது என மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மத ஒற்றுமையை குலைப்பதாக கங்கனா மீது மும்பை போலீஸ் வழக்கு பதிவு செய்யவும்: நீதிமன்றம்  title=

மும்பை: நடிகர் கங்கனா ரனாவத் மற்றும் அவரது சகோதரி ரங்கோலி சண்டேல் ஆகியோருக்கு எதிராக “மத ஒற்றுமை” குலைத்தாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யுமாறு பாந்த்ராவில் உள்ள பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றம் மும்பை போலீசாரிடம் சனிக்கிழமை கேட்டுக் கொண்டது.

கங்கனா மற்றும் அவரது சகோதரி மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய மும்பை போலீசார் மறுத்ததை அடுத்து பாலிவுட் இயக்குனர் முன்னவர்லால் சாஹில் ஆஷரபாலி சயீத் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

தனது மனுவில், சயீத், "கங்னா ரனாவத் பாலிவுட் மீது அவதூறு சுமத்துகிறார், மேலும் திரைப்படத் துறையில் பணியாற்றும் மக்களை போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள், வகுப்புவாத சார்புடையவர்கள் என சமூக ஊடக பதிவுகள் மற்றும் தொலைக்காட்சி நேர்காணல்கள் மூலம் அவர் தவறாகசித்தரிக்கிறார்” எனக் கூறியுள்ளார்.

கங்கனா ரனாவத் மற்றும் அவரது சகோதரியின் தொடர்ச்சியான சமூக ஊடக பதிவுகள் பாலிவுட் பெயரை  கெடுக்கிறது என மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. "இது அமைதியைக் குலைத்து, வகுப்புவாத பதற்றத்தை உருவாக்குகிறது. சிவசேனாவை பாபர் சேனா என்றும் அவர் அழைத்தார். மேலும் பால்கர் சம்பவம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்தார். ஒரு குறிப்பிட்ட சமூகம் சமுதாயத்தை மத அடிப்படையில் பிளவுபடுத்தும் வகையில் அவர் கருத்து கூறுகிறார் என மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது

ALSO READ | கல்வான் மோதல் இந்தியா- சீனா உறவை பெரிதும் பாதித்துள்ளது: அமைச்சர் ஜெய்சங்கர்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYe

Trending News