மகாராஷ்டிரா பிரச்சனை குறித்து விவாதிக்கும் பாராளுமன்றம்...

திங்களன்று நடைபெறும் மாநிலங்களவை அமர்வில், மகாராஷ்டிரா பிரச்சினை குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்ப முடிவுசெய்துள்ளனர். இதன் காரணமாக சபை புயல் காட்சிகள் நிறைந்து காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Updated: Nov 25, 2019, 10:30 AM IST
மகாராஷ்டிரா பிரச்சனை குறித்து விவாதிக்கும் பாராளுமன்றம்...

திங்களன்று நடைபெறும் மாநிலங்களவை அமர்வில், மகாராஷ்டிரா பிரச்சினை குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்ப முடிவுசெய்துள்ளனர். இதன் காரணமாக சபை புயல் காட்சிகள் நிறைந்து காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே மகாராஷ்டிராவின் அவசர பிரச்சினை குறித்து விவாதிக்க சபையின் நடவடிக்கைகளை இடைநிறுத்துமாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) தலைவர் பினாய் விஸ்வம் விதி 267-ன் கீழ் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

மகாராஷ்டிராவின் முன்னேற்றங்கள் நாட்டின் ஜனநாயக முறைக்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ளன என்றும், மூத்த இடதுசாரி தலைவர் சபாநாயகர் எம்.வெங்கையா நாயுடுவுக்கு கடிதம் வாயிலாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பினாய் விஸ்வம் தெரிவிக்கையில்., "இருளின் முகத்திரையின் கீழ் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கான மக்களின் விருப்பத்தை கொலை செய்வதை நோக்கமாகக் கொண்ட நள்ளிரவு சதி மிகுந்த கவலையாக உள்ளது. ஆளுநர் அலுவலகம் மீண்டும் ஒரு கருவியாக பயன்படுத்தப்பட்டுள்ளது." என குறிப்பிட்டுள்ளார்.

சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட திடீர் வளர்ச்சியில், தேவேந்திர பட்னாவிஸ் மகாராஷ்டிரா முதல்வராகவும், NCP தலைவர் அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவியேற்றனர். இவர்களுக்கு ஆளுநர் பகத் சிங் கோஷ்யரி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

பாஜக-அஜித் பவார் கூட்டணியில் மாநிலத்தில் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்ததை எதிர்த்து காங்கிரஸ், சிவசேன மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கின் விசாரணை நேற்று எடுத்துக்கொள்ளப்பட்டது.

இருதரப்பு வாதங்களை கேட்ட உச்சநீதிமன்றம், வழக்கின் விசாரணையினை அடுத்த நாளுக்கு(இன்று) ஒத்திவைத்தது. விசாரணையின் போது மகாராஷ்டிராவில் அஜித் பவார் ஆதரவில் ஆட்சி அமைக்க பட்னாவிஸ் சமர்பித்த ஆதரவு கடிதம், ஆட்சியமைக்க உத்தரவிட்ட ஆளுநரின் கடிதம் ஆகியவற்றை சமர்பிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கோருவது தொடர்பாக மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.