டெல்லி அரசுப் பள்ளி மதிய உணவில் இறந்த எலி: 9 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி

Last Updated : Feb 17, 2017, 10:38 AM IST
டெல்லி அரசுப் பள்ளி மதிய உணவில் இறந்த எலி: 9 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி title=

டெல்லியில் டியோலி என்னும் பகுதியில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் நேற்று மதிய உணவை உட்கொண்ட 9 மாணவர்கள் உடல்நிலை குறைபாடு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

பள்ளி குழந்தைகள் சாப்பிட்ட மதிய உணவில் ஒரு எலி இறந்து கிடந்ததை அறியாமல் உணவு விநியோகிக்கப்பட்டதால் இந்த அவலம் ஏற்பட்டது. 

எலி இறந்திருப்பதை பார்க்காமல் என் மகனுக்கு மதிய உணவை கொடுத்திருக்கிறார்கள். இதுபோன்ற அலட்சியத்தை ஒருபோதும் ஏற்றக்கொள்ள முடியாது என்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு குழந்தையின் தாய் கூறியுள்ளார்.  

மாணவர்களை மருத்துவமனையில் சென்று பார்த்த டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா,’மாணவர்கள் தற்போது நலமாக உள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

Trending News