தீபாவளிக்கு பிறகு டெல்லியில் மீண்டும் வாகன கட்டுப்பாடு திட்டம்: டெல்லி அரசு

இந்த வரிட தீபாவளிக்கு பிறகு டெல்லியில் மீண்டும் வாகன கட்டுப்பாடு திட்டம் செயல்படுத்தப்படும் என கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு அறிவித்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 13, 2019, 01:24 PM IST
தீபாவளிக்கு பிறகு டெல்லியில் மீண்டும் வாகன கட்டுப்பாடு திட்டம்: டெல்லி அரசு title=

புதுடில்லி: டெல்லியில் (Delhi) அதிகரித்து வரும் மாசுபாட்டைக் கட்டுப்படுத்த, கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு மீண்டும் வாகன கட்டுப்பாடு திட்டத்தை கையில் எடுத்துள்ளது. இந்த திட்டம் தேசிய தலைநகரில் 12 நாட்களுக்கு செயல்படுத்தப்பட உள்ளது. உலகில் காற்று மாசு அதிகம் கொண்ட மெட்ரோ நகரங்களில் டெல்லியும் இடம் பிடித்துள்ளது. இதனால் மாசுபாட்டைக் கட்டுப்பாட்டை குறைக்கும் விதமாக மேற்கொள்ளப்படும் இந்த திட்டம் நவம்பர் 4 முதல் 15 வரை பொருந்தும். அதாவது, தீபாவளிக்குப் பிறகு இந்த முறை தொடங்கப்படும்.

அதாவது ஒற்றை இலக்க தேதிகளில் ஒற்றை இலக்க எண் கொண்ட கார்கள் மட்டும் அனுமதிக்கப்படும். இரட்டை இலக்க தேதிகளில் இரட்டை இலக்க எண் கொண்ட கார்கள் மட்டும் அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

மேலும் டெல்லி அரசு காற்று மாசுவில் இருந்து பாதுகாக்க மக்களுக்கு முகமூடிகளை விநியோகிக்கும். மேலும் நவம்பர் மாதத்தில் தீபாவளி வர உள்ளதால், பட்டாசுகள் வெடிப்பதன் மூலம் காற்றின் தரம் குறைவதால், அதனால் ஏற்படும் மாசுக்காரணமாக மக்கள் மற்றும் குழந்தைகள் சுவாசிக்க சிரமப்படுகிறார்கள். எனவே பட்டாசுக்களை வெடிக்க வேண்டும் எனவும் டெல்லி மக்களிடம் கேட்டிக்கொள்கிறோம் என டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

மேலும் டெல்லியில் மரங்களை நடுவதற்கு மக்களைச் சேர்ப்போம். மரங்கள் வேண்டும் என்று பொதுமக்கள் எங்களுக்கு எஸ்எம்எஸ் செய்தால், அரசு அவர்களுக்கு வீட்டிற்கு செடிகளை அனுப்பி வைக்கும் எனவும் கெஜ்ரிவால் கூறினார்.

Trending News