காதலியை கொன்று 35 துண்டுகளாக வெட்டி புதைத்த காதலன்! தில்லியில் நடந்த கொடூரம்!

தில்லியில், காதலன், காதலியை கொன்று 35 துண்டுகளாக வெட்டி புதைத்த சம்பவம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 14, 2022, 05:12 PM IST
  • பாதிக்கப்பட்ட பெண் மும்பையில் உள்ள ஒரு கால் சென்டரில் வேலை செய்து வந்தார்.
  • தனது காதலியை கொலை செய்து, உடலை 35 துண்டுகளாக வெட்டி எறிந்த கொடூரம்.
காதலியை கொன்று 35 துண்டுகளாக வெட்டி புதைத்த காதலன்! தில்லியில் நடந்த கொடூரம்!

தில்லியில், காதலன், காதலியை கொன்று 35 துண்டுகளாக வெட்டி புதைத்த சம்பவம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 26 வயது இளம்பெண் ஒருவர் தான் காதலித்தவனை திருமணம் செய்ய முடிவு செய்து, பெற்றோரின் விருப்பத்திற்கு மாறாக அவனுடன் செல்ல முடிவு செய்துள்ளார். பின்னர், அவனோடு வாழ்ந்து வந்துள்ளார். ஆனால், கதையில் ஏற்பட்ட திருப்பமாக இளம் பெண் கொடூரமாக கொலை செய்யப்படுகிறாள். அவளை கொன்று உடலை 35 துண்டுகளாக வெட்டியுள்ளான் காதலன் குற்றம் சாட்டப்பட்டவர் தேசிய தலைநகரின் வெவ்வேறு இடங்களில் உடல் உறுப்புகளை புதைக்க, 18 இரவுகளுக்கு மேல் நகரம் முழுவதும் சுற்றித் திரிந்து வந்துள்ளான்.

தனது காதலியை கொலை செய்து, உடலை 35 துண்டுகளாக வெட்டி எறிந்ததாகக் கூறப்படும் நபரை தில்லி போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். அப்தாப் அமீன், மே 18 அன்று பெற்றோரைத் விட்டு விட்டு வந்து தன்னுடன் வாழ வந்த சாரதா என்பவரின் கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்னர் அவர் தனது உடலை 35 துண்டுகளாக வெட்டி அவற்றை வைக்க குளிர்சாதன பெட்டியை வாங்கினார். அடுத்த 18 நாட்களில், டெல்லியைச் சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் துண்டுகளை அப்புறப்படுத்துவதற்காக அதிகாலை 2 மணியளவில் அவர் தனது வீட்டை விட்டு சென்று, அவளது உடல் பாகங்கள் ஒவ்வொன்றாக புதைத்து வதுள்ளார்.

இது குறித்து டெல்லி போலீசார் கூறுகையில், “அவர்கள் அடிக்கடி தகராறு செய்து வந்த நிலையில், ஒரு சண்டை எல்லை மீறியுள்ளது. இந்த குறிப்பிட்ட நிகழ்வில், அந்த நபர் தனது கோபத்தை இழந்து மே மாதம் அவளைக் கொலை செய்திருக்கிறார். அவன் தனது காதலியை துண்டு துண்டாக வெட்டி, அவளது பாகங்களை அருகிலுள்ள பகுதிகளில் அப்புறப்படுத்தியதாக எங்களிடம் கூறினார். அவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது” என்றார்.

மேலும் படிக்க | கணவருடனும், மகளுடனும் வாழ ஆசை - நளினியின் உருக்கமான பேட்டி 

பாதிக்கப்பட்ட பெண் மும்பையில் உள்ள ஒரு கால் சென்டரில் வேலை செய்து வந்தார், அங்கு குற்றம் சாட்டப்பட்ட அப்தாப் என்பவரை சந்தித்தார். அவர்கள் டேட்டிங் செய்யத் தொடங்கினர், பின்னர் ஒன்றாக வாழ்த் தொடங்கினர். அவர்களது உறவை குடும்பத்தினர் ஏற்காததால் அவர்கள் அங்கிருந்து வெளியேறி மெஹ்ராலியில் உள்ள ஒரு குடியிருப்பில் ஒன்றாக வாழத் தொடங்கினர்.

மகளின் அழைப்புகளுக்கு பதிலளிப்பதை நிறுத்தியதால், பாதிக்கப்பட்டவரின் தந்தை டெல்லிக்கு வந்து, மகளை தேடிய போது இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. அவர் பிளாட்டை அடைந்தபோது, ​​அது பூட்டப்பட்டிருந்தது. அவர் மெஹ்ராலி காவல்துறையை அணுகி கடத்தப்பட்டதாக புகார் அளித்தார்.

அவரது புகாரின் பேரில், அப்தாபை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். விசாரணையில், சாரதா தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதால் இருவரும் அடிக்கடி சண்டை வந்ததாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து சாரதாவின் உடலை தேடி வருகின்றனர்.

மேலும் படிக்க | பூந்தமல்லி அருகே ஓடும் காரில் திடீர் தீ விபத்து

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

More Stories

Trending News