தலைநகர் டெல்லி மற்றும் அதை சுற்றியுள்ள மாநிலங்களில் நேற்றிரவு 8 மணிக்கு, நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், உடனடியாக மக்கள் வீதியில் திரண்டுள்ளனர். மேலும், இந்த நிலநடுக்கம், நேபாளத்தை மையம் கொண்டு நிகழந்துள்ளது. நேற்று ஏற்பட்ட நிலநடுக்கம், 5.4 ரிக்டர் அளவில் நிகழ்ந்துள்ளதாக தேசிய நில அதிர்வுக்கான ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, நேபாள நிலநடுக்க கண்காணிப்பு ஆணையம் கூறுகையில்,"நேபாளத்தின் பஜ்ஹாங் மாவட்டத்தை மையம் கொண்டு, நவ.12ஆம் தேதி, உள்ளூர் நேரப்படி இரவு 8.12 மணிக்கும், இந்திய நேரப்படி இரவு 7.57 மணிக்கும் நிகழ்ந்துள்ளது. இது கடந்த மூன்று மாதங்களில் நேபாளில் நிகழும் ஐந்தாவது நிலநடுக்கமாகும். குறிப்பாக, ரிக்டர் அளவில் 4 மற்றும் அதற்கு மேலும் வலிமையான நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன" என குறிப்பிட்டுள்ளது.
My bed was literally swinging #delhi #earthquake
— Varshita(@pluviophile05_) November 12, 2022
மேலும் படிக்க | நேபாளம் மணிப்பூர் டெல்லியை தாக்கிய நிலநடுக்கம்! 6.2 ரிக்டர் அளவிலான பூகம்பம்
டெல்லியில் உணரப்பட்ட நிலநடுக்கத்துடன் ஒப்பிடுகையில், நேபாளத்தில் குறைவான தீவிரம் கொண்ட நிலநடுக்கமே ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் டெல்லி, நொய்டா, குருக்ராம் நகரங்களோடு உத்தரப் பிரேதசம், உத்தரகண்ட், பஞ்சாப் ஆகிய மாநிலங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
Earthquake of Magnitude:5.4, Occurred on 12-11-2022, 19:57:06 IST, Lat: 29.28 & Long: 81.20, Depth: 10 Km ,Location: Nepal, for more information Download the BhooKamp App https://t.co/4wntmaWERI @ndmaindia @Indiametdept @Ravi_MoES @OfficeOfDrJS @Dr_Mishra1966 @PMOIndia pic.twitter.com/eyQE1HMb5Z
— National Center for Seismology (@NCS_Earthquake) November 12, 2022
கடந்த புதன்கிழமை (நவ. 9) அன்று நள்ளிரவு 2 மணியளவில், டெல்லி மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதைபோன்று, அப்போதும் நேபாளத்தை மையம் கொண்டுதான் நிலநடுக்கம் நிகழந்துள்ளது. இவ்விரு நிலநடுக்கங்களின் ஆழம், சுமார் 10 கி.மீ., என தெரிவிக்கப்பட்டுள்ளது.
This was a long earthquake !
— Ashneer Grover (@Ashneer_Grover) November 12, 2022
கடந்த புதன்கிழமை நிகழ்ந்த நிலநடுக்கத்தால், நேபாளத்தில் 6 பேர் கொல்லப்பட்டனர், 8 பேர் காயமடைந்தனர். இன்றைய நிலநடுக்கம் மையம் கொண்டிருந்த இடத்தில் இருந்து 70 கி.மீ தொலைவில் உள்ள டோட்டி மாவட்டத்தில் கடந்த புதன்கிழமை நிகழ்ந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ