Republic Day டெல்லி டிராக்டர் பேரணிக்கு கடுமையான நிபந்தனைகளுடன் அனுமதி

டெல்லியில் குடியரசு தினத்தன்று நடைபெறும் டிராக்டர் பேரணியில் பங்கேற்பதற்காக, பஞ்சாப் மற்றும் ஹரியானாவிலிருந்து ஆயிரக்கணக்கான டிராக்டர்கள் டெல்லிக்கு செல்கின்றன. கடுமையான நிபந்தனைகளுடன் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

Written by - ZEE Bureau | Last Updated : Jan 25, 2021, 01:50 PM IST
  • டெல்லி டிராக்டர் பேரணிக்கு அனுமதி
  • கடுமையான நிபந்தனைகளுடன் அனுமதி
  • குடியரசு தின அணிவகுப்பு முடிந்த பிறகு டிராக்டர் பேரணி
Republic Day டெல்லி டிராக்டர் பேரணிக்கு கடுமையான நிபந்தனைகளுடன் அனுமதி

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் குடியரசு தினத்தன்று டிராக்டர் அணிவகுப்பை நடத்த டெல்லி காவல்துறை அனுமதி வழங்கிவிட்டது. ஆனால், அவர்கள் திட்டமிட்ட பாதையில் சில மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன. விதிமுறைகளிலும் சற்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதேபோல டெல்லி ராஜ்பாத்தில் குடியரசு தின அணிவகுப்பு முடிந்த பின்னரே டிராக்டர் பேரணி தொடங்கும் என கூறப்படுகிறது.

ஏற்கனவே ஒப்புக் கொண்டபடி, விவசாயிகள் (Farmers), மூன்று எல்லைகளிலிருந்தும் டெல்லிக்குள் நுழையலாம். ஆனால், எல்லைகளை ஒட்டிய பகுதிகளில் தங்கியுள்ளவர்கள் டெல்லியின் மையப்பகுதியை நோக்கிச் செல்ல அனுமதிக்கபடவில்லை.

டிராக்டர் பேரணியில் பங்கேற்பதற்காக, பஞ்சாப் மற்றும் ஹரியானாவிலிருந்து ஆயிரக்கணக்கான டிராக்டர்கள் டெல்லிக்கு செல்கின்றன.

Also Read | குடியரசு தினத்தன்று டெல்லியில் பிரம்மாண்ட டிராக்டர் பேரணி நடைபெறுமா?

மத்திய அரசு கொண்டு வந்த விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் நடத்தும் போராட்டம் 60வது நாளாக தொடர்கிறது. அதிலும் குறிப்பாக, பஞ்சாய், ஹரியானா உள்ளிட்ட பல வட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மத்திய அரசுடன் நடைபெற்ற 11 சுற்று பேச்சுவார்த்தைகளில் எந்தவொரு முடிவும் எட்டப்படாத நிலையில், குடியரசு தினத்தன்று (Republic Day) டெல்லியில் பிரமாண்டமாக டிராக்டர் பேரணி நடத்த விவசாய சங்கங்கள் திட்டமிட்டு, அதற்காக டெல்லியை நோக்கி டிராக்டர்கள் வரத் தொடங்கிவிட்டன. அந்த பேரணியில் சுமார் 2 லட்சம் டிராக்டர்கள் பங்கேற்கும் என்று கூறப்படுகிறது.

முன்னதாக டிராக்டர் பேரணி தொடர்பாக டெல்லி காவல்துறை  (Police) விவசாயிகளுடன் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியது. இந்தப் பேரணியை ரத்து செய்யும்படி வலியறுத்தியதை விவசாயிகள் புறதள்ளிவிட்டார்கள். பிறகு குடியரசு தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டிருப்பதால் தலைநகர் டெல்லிக்கு வெளியே வேறு இடத்தில் பேரணியை நடத்தவும் எடுத்துச் சொன்னது. 

Also Read | ஆடைக்கு மேல் தொடுவது பாலியல் வன்முறை ஆகாது: மும்பை நீதிமன்றத்தின் வினோத தீர்ப்பு

ஆனால் விவசாயிகள் காவல்துறையினரின் பரிந்துரைகளை ஏற்க மறுத்துவிட்டனர். நேற்று நடைபெற்ற நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு டெல்லி, உத்தரப்பிரதேசம் மற்றும் ஹரியானாவின் காவல்துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் வரும் குடியரசு தினமான ஜனவரி 26-ம் தேதி பேரணி நடத்துவது தொடர்பான ஒரு உடன்பாட்டிற்கு வந்தனர்.  

டெல்லியின் எல்லையில் அமைந்திருக்கும் சிங்கு பகுதியில் இருந்து டிராக்டர்களின் அணிவகுப்பு மற்றுனொரு எல்லையான திக்ரி எல்லை வரை டிராக்டர்கள் அணிவகுத்து செல்லும் என்று கூறப்படுகிறது. டெல்லிக்குள் 100 கிமீ தூரத்திற்கு டிராக்டர் பேரணி நடத்தப்போவதாக போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குடியரசு தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, டெல்லி காவல்துறை நகரத்திலும் அதைச் சுற்றியும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. டெல்லியின் எல்லைப்பகுதிகளான சிங்கு, திக்ரி மற்றும் காசிப்பூர் எல்லைகளில் 40,000-க்கும் மேற்பட்ட காவல்துறை, ஐ.டி.பி.பி மற்றும் சி.ஆர்.பி.எஃப் பணியாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.  

இந்த ஆண்டு குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் ஏற்கனவே கொரோனா தொற்றால் பலவித மாறுதல்களையும், கட்டுப்பாடுகளையும் எதிர்கொண்டுள்ள நிலையில், விவசாயிகளின் போராட்டம், பேரணி, பேச்சுவார்த்தை, பாதுகாப்பு என முற்றிலும் மாறுபட்டதாக இருக்கப் போவது உறுதி.

Also Read | BSNL குடியரசு தினம் 2021 சலுகை: அட்டகாசமான புதிய 2 திட்டங்கள் அறிமுகம்!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News