ஜாமியா கலவரத்தில் ஈடுப்பட்டதாக 70 பேர் புகைப்படம் வெளியீடு!

டெல்லி ஜாமியா நகரில் கடந்த டிசம்பர் 15, 2019 அன்று நடந்த குடியுரிமை திருத்தச் சட்ட போராட்டத்தின் போது வெடித்த வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 70 பேரின் புகைப்படங்களை டெல்லி காவல்துறையினர் புதன்கிழமை (ஜனவரி 29) வெளியிட்டனர்.

Last Updated : Jan 29, 2020, 05:18 PM IST
ஜாமியா கலவரத்தில் ஈடுப்பட்டதாக 70 பேர் புகைப்படம் வெளியீடு! title=

டெல்லி ஜாமியா நகரில் கடந்த டிசம்பர் 15, 2019 அன்று நடந்த குடியுரிமை திருத்தச் சட்ட போராட்டத்தின் போது வெடித்த வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 70 பேரின் புகைப்படங்களை டெல்லி காவல்துறையினர் புதன்கிழமை (ஜனவரி 29) வெளியிட்டனர்.

இந்த சந்தேக நபர்களைப் பற்றிய தகவல்களை வழங்கும் எவருக்கும் டெல்லி காவல்துறை வெகுமதி அளிக்கும் என்று குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது. 

ஜாமியா பல்கலை.,யில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எழுந்த போராட்டத்தின் போது, போராட்டத்தை தூண்டியதாக கவல்துறையினர் சிலரை அடையாளம் கண்டுள்ளனர். மேலுல் இவர்களை விரைவில் பிடிக்க தீவிர பணியில் காவல்துறையினர் ஈட்புபட்டு வருகின்றனர். அந்த வகையில் போராட்டத்தை தூண்டியதாக கருதப்படும் 70 நபர்களில் புகைப்படங்களை டெல்லி காவல்துறையினர் தற்போது வெளியிட்டுள்ளனர். 

மேலும், இந்த கலவரக்காரர்கள் தொடர்பான தகவல்களை 011-23013918 மற்றும் 9750871252 என்ற எண்ணில் வழங்குமாறு காவல்துறை மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

முன்னதாக இந்த வழக்கு தொடர்பாக டிசம்பர் 17-ஆம் தேதி, குற்றப் பின்னணி கொண்ட பத்து பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில், யாரும் ஜாமியா மில்லியா இஸ்லாமியாவின் மாணவர்கள் இல்லை என்றும் டெல்லி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், டிசம்பர் 15-ஆம் தேதி நடந்த ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதாக 15 பேர் மீது டெல்லி காவல்துறையினர் FIR பதிவு செய்திருந்தனர். கிளர்ச்சியாளர்கள் நியூ பிரண்ட்ஸ் காலனி அருகே நான்கு பேருந்துகளை தீக்கிரையாக்கியுள்ளனர், குறைந்தது ஆறு காவலர்கள் மற்றும் இரண்டு தீயணைப்பு படையினரை காயப்படுத்தினர் எனவும் குற்றம்சாட்டினர். மேலும் ஜாமியா நகரில் உள்ள சராய் ஜூலேனா பகுதியைச் சேர்ந்தவர்களை காவல்துறையினருடன் மோதியதாகக் கூறப்படுகிறது. 

இதுகுறித்து டெல்லி தென்கிழக்கு காவல் ஆணையர் சின்மாய் பிஸ்வால் தெரிவிக்கையில்., டிசம்பர் 16, 2019 அன்று, சுமார் 2,000 பேர் கொண்ட ஒரு கும்பல் நடத்திய போராட்டம் வன்முறை கும்பலுக்கு துணையாக மாறியது. இந்த நடவடிக்கையின் பொது போராட்டக்காரர்கள் பேருந்துகளை குறிவைத்தது தாக்கினர் எனவும் தெரிவித்துள்ளார்.

ஜாமியா மில்லியா இஸ்லாமியா வளாகத்திற்குள் நுழைவதற்கான காவல்துறை முடிவின் பேரில், பிஸ்வால் பல்கலைக்கழக வளாகம் ஒன்றிணைக்கப்படவில்லை என்றும் அது சாலையின் இருபுறமும் அமைந்துள்ளது என்றும் காவல்துறையினர் போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த முயன்றபோது அவர்களில் பலர் பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்து கற்களை வீசத் தொடங்கினர் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இதனால் காவல்துறையினர் வளாகத்திற்குள் நுழைந்து அந்த இடங்களை சரிபார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Trending News