மெளலானா சாத் கைதுக்கு ஏன் உள்துறை அமைச்சகம் இதுவரை அனுமதி கொடுக்கவில்லை?

கடந்த மார்ச் மாதம் தேசிய தலைநகரில் நிஜாமுதீனில் உள்ள தப்லிகி ஜமாத்தின் (Tablighi Jamaat) தலைமையகத்தில் உள்ள நடைபெற்ற மதக்கூட்டத்தில் குறைந்தது 9,000 பேர் பங்கேற்றனர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 22, 2020, 11:50 PM IST
  • நிஜாமுதீன் மார்க்கசில் பல நாடுகளைச் சேர்ந்த சுமார் 16 சிறார்கள் பங்கேற்றனர்
  • 1897ஆம் ஆண்டின் தொற்றுநோய் சட்டத்தின் கீழ் மெளலானா சாத் மற்றும் பிறருக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது
  • நேபாளம், மலேசியா மற்றும் கஜகஸ்தானைச் சேர்ந்த சிறுவர்கள் மீது அரசாங்கம் இதுவரை எந்தவொரு நோட்டீசையும் அனுப்பவில்லை
  • மெளலானா சாத் கோவிட் -19 பரிசோதனையை வேண்டுமென்றே தாமதப்படுத்துவதாக டெல்லி காவல்துறை சந்தேகம்
மெளலானா சாத் கைதுக்கு ஏன் உள்துறை அமைச்சகம் இதுவரை அனுமதி கொடுக்கவில்லை? title=

புதுடெல்லி: கடந்த மார்ச் மாதம் தேசிய தலைநகரில் நிஜாமுதீனில் உள்ள தப்லிகி ஜமாத்தின் (Tablighi Jamaat) தலைமையகத்தில் உள்ள நடைபெற்ற மதக்கூட்டத்தில் குறைந்தது 9,000 பேர் பங்கேற்றனர். கொரோனா பெருந்தொற்று பரவியபோது ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தபோது, இதுபோன்ற பெருங்கூட்டம் ஒன்று நடைபெற்றது மிகப் பெரிய சர்ச்சையை கிளப்பியதும், தகவல் தெரிந்த போலீசார் அவர்களை அங்கிருந்து அகற்றியதும் அனைவரும் அறிந்ததுதான். பிறகு அங்கு தங்கியிருந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோது, அதில் பலருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்தக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு தங்கள் மாநிலங்களுக்கு சென்றனர்.  இது கொரோனா பரவுவதற்கு முக்கிய காரணமாக இருந்ததாக சர்ச்சைகளும், விவாதங்களும் அதிகரித்தன.  டெல்லியின் நிஜாமுதீன் பகுதி காவல்துறையினர் இது தொடர்பாக தப்லீகி ஜமாத் தலைவர் மெளலானா சாத் மீது வழக்கு பதிவு செய்தனர்.

Read Also | COVID-19 சிக்கிசைக்கான மருந்தை அறிமுகப்படுத்திய சிப்லா - முழு விவரம்!

ஆனால் இதுவரை அந்த அமைப்பின் தலைவரும் முஸ்லீம் மதகுருவுமான மெளலானா சாத் கந்தால்வி (Maulana Saad) இன்னும் கைது செய்யப்படவில்லை. அவர் மீது சட்டபூர்வமான நடவடிக்கைகளை எடுப்பதற்காக,   உள்துறை அமைச்சகத்திடம் இருந்து பச்சைக் கொடி வரவேண்டும் என டெல்லி காவல்துறை காத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

50 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களுடன் எந்தவொரு நிகழ்வும் நடத்தப்படக்கூடாது என்று அரசு தடை விதித்திருந்த நேரத்தில், ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துக் கொண்ட கூட்டத்தை நடத்தியது தொடர்பாக, 1897ஆம் ஆண்டின் தொற்றுநோய் சட்டத்தின் கீழ் மெளலானா சாத் மற்றும் பிறருக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது.  தப்லீகி ஜமாத் கூட்டத்தில் கலந்துக் கொண்ட பலருக்கு கொரோனா பாதிப்பு இருந்ததால், நிஜாமுதீன் மார்க்கஸ் கோவிட் -19 ஹாட்ஸ்பாட்டாக உருவெடுத்தது.

இந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற நிஜாமுதீன் மத சபையில் பல நாடுகளைச் சேர்ந்த சுமார் 16 சிறார்களும் பங்கேற்றதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நேபாளம், மலேசியா  மற்றும் கஜகஸ்தானைச் சேர்ந்த சிறுவர்கள் மீது அரசாங்கம் இதுவரை எந்தவொரு நோட்டீசையும் அனுப்பவில்லை என்பதோடு, அவர்கள் மீது குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யவில்லை.

Read Also | தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,710 பேருக்கு கொரோனா தொற்று..!

இது தொடர்பாக உள்துறை அமைச்சகம் அல்லது வெளியுறவு அமைச்சகத்தின் பதிலுக்காக தில்லி காவல்துறை இன்னும் காத்திருக்கிறது. டெல்லி நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து, வெளிநாட்டு சிறார்கள் டெல்லியில் உள்ள மையங்களுக்கு அனுப்பப்பட்டனர்.

டெல்லி காவல்துறையின் குற்றப்பிரிவிலிருந்து பலமுறை நோட்டீஸ்கள் அனுப்பப்பட்ட போதிலும், மெளலானா சாத் தனது கொரோனா வைரஸ் கோவிட் -19 சோதனையை இன்னும் சமர்ப்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பாதுகாப்பு அமைப்புகள் மெளலானா சாத் உடன் தொடர்ந்து தொடர்பு கொண்டு வருகின்றன.

போலீஸ் நடவடிக்கையில் இருந்து தப்பிப்பதற்காக மெளலானா சாத் கோவிட் -19 பரிசோதனையை வேண்டுமென்றே தாமதப்படுத்துவதாக டெல்லி காவல்துறை முன்னரே கூறியிருந்தது.

காவல்துறையின் நோட்டிசுக்கு பதிலளித்த சாதின் வழக்கறிஞர், தான் பதில் தாக்கல் செய்துள்ளதாகவும், 'லாக்டவுனால் அலுவலகங்கள் மற்றும் துறைகள் மூடப்பட்டிருப்பதால்' ஆவணங்களை தயாரிக்க காலதாமதம் ஏற்படுவதை முன்னிட்டு, அதிக கால அவகாசம் கோரியுள்ளதாகவும் கூறினார்.

Trending News