மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 7 MP-கள் சஸ்பெண்ட்!!

மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் மீதான எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிப்பு!!

Updated: Sep 21, 2020, 10:40 AM IST
மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 7 MP-கள் சஸ்பெண்ட்!!

மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் மீதான எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிப்பு!!

மாநிலங்களவையில் விவசாய சீர்திருத்த மசோதாக்களை மத்திய அரசு கொண்டு வந்த போது, அவையில் அநாகரீகமாக நடந்து கொண்ட 7 ராஜ்யசபா உறுப்பினர்களை ஒரு வாரத்திற்கு அவைத்தலைவர் வெங்கையா நாயுடு சஸ்பெண்ட் செய்துள்ளார். விவசாய மசோதாக்களுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அவை மீண்டும் கூடியபோது எதிர்ப்புக்கு மத்தியில் குரல் வாக்கெடுப்பு மூலம் வேளாண் மசோதாக்கள் நிறைவேறியது.

கடந்த 2014 ஆம் ஆண்டில் மோடி அரசு பொறுப்பேற்றதிலிருந்து, விவசாயிகளின் வருமானத்தை நாட்டின் 75-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் 2022 ஆம் ஆண்டிற்குள் இரட்டிப்பாக்க பல திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. இந்த வரிசையில் அவசர சட்டமாக கொண்டுவரப்பட்ட விவசாயிகளுக்கான சீர்திருத்த மசோதாக்களை தற்போதைய மழைகாலக் கூட்டத்தொடரில் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தது.

மக்களவையில் பெரிய அளவில் எதிர்ப்பு இல்லாமல் கடந்த வியாழக்கிழமை மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில், எதிர்க்கட்சிகளின் ஆதிக்கம் மிகுந்த மாநிலங்கவலையில் நேற்று பல்வேறு அமளிகளுக்கிடையில் மூன்றில் இரண்டு விவசாய மசோதாக்களை மட்டும் மத்திய அரசு நிறைவேற்றியது.

ALSO READ | ஆன்லைனில் கேம் விளையாட ₹.90,000 செலவு செய்த 12 வயது சிறுவன்!!

இந்நிலையில், நேற்று மசோதா மீதான விவாதம் நடந்த போது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையின் துணைத்தலைவரின் மைக்கைப் பிடுங்கி, மசோதாக்களை கிழித்து எறிந்து ரகளையில் ஈடுபட்டனர். சபையில் இவ்வாறு அநாகரீகமாக நடந்து கொண்டதால் அவையின் தலைவரும் துணைக்குடியரசுத் தலைவருமான வெங்கையா நாயுடு அதிருப்தி அடைந்ததாகக் கூறப்பட்டது. ரகளையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை வலுத்தது.

இதை தொடர்ந்து, ரகளையில் ஈடுபட்ட ராஜ்யசபா உறுப்பினர்களான டெரிக் ஓ பிரையன், சஞ்சய் சிங், ராஜு சதாவ், கே.கே.ரகேஷ், ரிபுன் போரா, டோலா சென், சையத் நஜீர் உசேன் மற்றும் எலமரன் கரீம் ஆகிய எட்டு பேரும் அவை நடவடிக்கைகளில் கலந்து கொள்ள ஒரு வாரம் தடை விதித்துவெங்கையா நாயுடு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.