லேட்டா இருந்தாலும் லேட்டஸ்டாக சென்றது தேஜாஸ் எக்ஸ்பிரஸ்

Updated: Jun 12, 2017, 04:24 PM IST
லேட்டா இருந்தாலும் லேட்டஸ்டாக சென்றது தேஜாஸ் எக்ஸ்பிரஸ்
Zee Media Bureau

கோவா - மும்பை இடையே இயக்கப்படும் அதிவேக தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயில் 3 மணி நேரம் தாமதமாக புறப்பட்டாலும், ஒரு நிமிடம் முன்னதாகவே மும்பையை அடைந்து சாதனை படைத்துள்ளது.

மே, 22-ம் தேதி இந்த ரயில் சேவையை பிரபு துவக்கி வைத்தார்கள். தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயிலில், 13 அதிநவீன பெட்டிகள் பொருத்தப்பட்டுள்ளன. பல நவீன வசதிகள் இதில் இடம் பெற்றுள்ளன. இந்த ரயில் அதிகபட்சமாக, மணிக்கு, 200 கி.மீ., வேகத்தில் செல்லும் திறன் படைத்தது. 

இந்த ரயில் வழக்கமாக மும்பை - கோவா இடையிலான 750 கி.மீ., தூரத்தை, 8.30 மணி நேரத்தில் கடந்து விடும். ஆனால், புதிய அட்டவணைபடி இந்த ரயில், வாரத்திற்கு மூன்று நாட்கள் மும்பையில் இருந்து இயக்கப்படும். அடுத்த நாள் கோவாவில் இருந்து மும்பைக்கு இயக்கப்படும்.

புதிய அட்டவணைபடி இந்த ரயில் கோவாவில் இருந்து நேற்று காலை, 10.30 மணிக்கு புறப்பட்டது. வழக்கமான நேரத்தை விட இது மூன்று மணி நேரம் தாமதமாக புறப்பட்டது. எனினும்இந்த ரயில் மும்பையை இரவு 7.44 மணிக்கு சென்றடைந்தது. 

வழக்கமான நேரத்தை விட, ஒரு நிமிடத்திற்கு முன்பாகவே மும்பை சென்று விட்டது.