மத்திய பிரதேச அரசியல் நெருக்கடி தொடர்பான உச்ச நீதிமன்ற விசாரணைக்கு முன்னதாக, காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் புதன்கிழமை அதிகாலை பெங்களூரை அடைந்து கிளர்ச்சி காங்கிரஸ் MLA-க்கள் தங்கியுள்ள ரமாடா ஹோட்டலுக்கு செல்ல முயன்றார்.
இருப்பினும், திக்விஜய் சிங் ஹோட்டலுக்குள் செல்வதைத் தடுத்து நிறுத்தினார், அதைத் தொடர்ந்து அவர் அங்கு தர்ணாவில் அமர்ந்தார். இதனைத்தொடர்ந்து அவர் பெங்களூரு காவல்துறையால் தடுப்புக் காவலில் எடுக்கப்பட்டார். இவருடன் கர்நாடகா காங்கிரஸ் தலைவர் சிவக்குமார், காங்கிரஸ் தலைவர்கள் சஜன் சிங் வர்மா, கண்டிலால் பௌரியா ஆகியோரும் காவல்துறை கட்டுப்பாட்டில் தற்போது உள்ளனர்.
"கிளர்ச்சி MLA-க்களைச் சந்திக்க முயன்றதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டதால், சிங் ரமடா ரிசார்ட்டுக்கு அருகில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்," என்று காவல்துறை அதிகாரி ஒருவர் உறுதி தெரிவித்துள்ளார்.
#MadhyaPradesh Congress leaders Sachin Yadav and Kantilal Bhuria have also been placed under preventive arrest. https://t.co/z1X1IcDwyk
— ANI (@ANI) March 18, 2020
இதுகுறித்து திக்விஜய் தெரிவிக்கையில்., "நான் ஒரு மாநிலங்களவை வேட்பாளர், எனக்கு MLA-க்களை சந்திக்க அனுமதி இல்லை" என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, திக்விஜய் சிங்கை கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார் விமான நிலையத்தில் வரவேற்றார். இதன்போது அவர்., "காங்கிரஸ் கட்சி ஒன்றுபட்டது, எங்களுக்கு எங்கள் சொந்த அரசியல் மூலோபாயம் உள்ளது" என்று கூறினார்.
இந்த விவகாரம் விசாரணைக்கு வரும்போது உச்ச நீதிமன்றத்தில், மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் மத்தியப் பிரதேச அரசாங்கத்துக்கும், சபாநாயகராக அபிஷேக் சிங்விக்கும் ஆஜரானார்.
மாநிலத்தில் கமல்நாத் அரசாங்கம் தனது பெரும்பான்மையை இழந்துவிட்டதாக கருதும் நிலையில்., நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என பாஜக வலியுறுத்தி வருகிறது. இந்த வளர்ச்சியில் தற்போது உச்ச நீதிமன்றத்தின் உதவியையும் நாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.