18 வயதுக்கு மேற்பட்டோருக்கு பாஸ்போர்ட் வேண்டுமா? அப்ப ஆதார் வேண்டும்!!

18 வயதிற்கு மேற்பட்டோர் பாஸ்போர்ட் பெறுவதற்கு கட்டாயமாக ஆதார் இருக்க வேண்டும் என்று வெளியுறவுத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

Last Updated : Jan 19, 2018, 05:24 PM IST
18 வயதுக்கு மேற்பட்டோருக்கு பாஸ்போர்ட் வேண்டுமா? அப்ப ஆதார் வேண்டும்!! title=

18 வயதிற்கு மேற்பட்டோர் பாஸ்போர்ட் பெறுவதற்கு கட்டாயமாக ஆதார் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு வெளியுறவுத்துறை அதிரடி அறிவிப்பாக அரசாணை வெளியிட்டுள்ளது.

மேலும், பாஸ்போர்ட் விண்ணப்பிப்பதில் சில புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தி இருக்கிறது. மத்திய அரசு தற்போது பல அத்தியாவசிய தேவைகள் அனைத்திற்கும் ஆதார் கார்ட் சமர்ப்பிக்க கட்டாயப்படுத்தி வருகிறது. செல்போன் நிறுவனங்கள் கூட ஆதார் கார்டை கட்டாயமாக்கி இருக்கிறது.

இந்த நிலையில் தற்போது பாஸ்போர்ட் பெறவும் ஆதார் கார்ட் கட்டாயம் என்று கூறப்பட்டு இருக்கிறது. அதன்படி 18 வயதுக்கு மேற்பட்டோர் பாஸ்போர்ட் பெற ஆதார் எண் கட்டாயம் ஆகும்.

ஆனால் தட்கல் முறையில் பாஸ்போர்ட் பெற ஆதார் மட்டும் போதாது. ஆதார் கார்டுடன் மேலும் இரண்டு ஆவணங்கள் தேவை என மத்திய அரசு கூறியுள்ளது.

18 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆதாருடன் ரேஷன் கார்ட், அரசு ஊழியர் கார்ட் சமர்ப்பிக்கலாம். அரசு ஊழியராக இல்லாதவர் ஆதாருடன் வங்கி கணக்கு, பான் கார்ட் சமர்ப்பிக்கலாம் என்று அந்த ஆணையில் கூறப்பட்டுள்ளது.

அதேபோல் 18 வயதிற்கு குறைவாக உள்ளவர்கள் ஆதாருடன் மாணவர் அடையாள அட்டை சமர்ப்பிக்க வேண்டும். இந்த புதிய நடைமுறை தற்போதில் இருந்து நடைமுறைக்கு வந்து இருக்கிறது.

Trending News