இரட்டை இலை விவகாரம்: 4 லாரிகளில் ஆவணங்கள் தாக்கல்!

Last Updated : Jun 12, 2017, 01:31 PM IST
இரட்டை இலை விவகாரம்: 4 லாரிகளில் ஆவணங்கள் தாக்கல்! title=

இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக டெல்லி தேர்தல் கமிஷன் அலுவலகத்தில் சசிகலா அணி சார்பில், தமிழக சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்தார்.

4-வது முறையாக சசிகலா அணி சார்பில் இன்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. 4 லாரிகளில் எடுத்து வரப்பட்ட 1,52,000 பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்யப்பட்டது. தமிழக சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்தார்.

இதுவரை சசிகலா தரப்பில் 3,10,000 பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கடந்த வாரம் ஓபிஎஸ் தரப்பில் பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று சசிகலா தரப்பினர் ஆவணங்கள் தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Trending News