நிலநடுக்கம் வந்தால் என்ன செய்ய வேண்டும்...? என்ன செய்ய கூடாது...?

Turkey Earthquake: துருக்கியில் நிலநடுக்கத்தில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், பொதுமக்கள் அந்த நேரத்தில் செய்யக்கூடியவை குறித்தும், செய்யக்கூடாதவை குறித்தும் இதில் காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Feb 7, 2023, 07:58 PM IST
  • துருக்கியில் பலி எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்தது.
  • துருக்கியில் 1900ஆம் ஆண்டில் இருந்து இதுவரை 76 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
  • இதில், 90 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
நிலநடுக்கம் வந்தால் என்ன செய்ய வேண்டும்...? என்ன செய்ய கூடாது...?

Turkey Earthquake: துருக்கி, சிரியாவில் 7.8 ரிக்டர் அளவில் மிகப்பெரும் நிலநடுக்கம் நேற்று (பிப். 7) ஏற்பட்டது. கடந்த 10 ஆண்டுகளில் உலகம் முழுவதும் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் இது மிகவும் பயங்கரமானது. இதுவரை 5 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். 7.8 ரிக்டர் நிலநடுக்கத்தை தொடர்ந்து, நான்கு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. 

துருக்கியில் 1939ஆம் ஆண்டு முதல் 1999ஆம் ஆண்டு வரை துருக்கியில் ஐந்து பெரும் நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. 1900ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை 76 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதில் மொத்தம் 90 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த உயிரிழப்புகளில் பாதி பேர், 1939ஆம் ஆண்டில் இருந்து 1999ஆம் ஆண்டு வரையிலான காலகட்டங்களில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில்தான் உயிரிழந்துள்ளனர். ஹைதி நாட்டில் 2021ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கம், 20 ஆண்டுகளில் ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கத்தில் ஒன்றாக பார்க்கப்பட்டது. அதில் 2,200 பேர் உயிரிழந்தனர். 2018இல் 4300 பேர் இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தனர். அதே இந்தோனேஷியாவில் 2017இல் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 400 பேர் உயிரிழந்தனர். 

மேலும் படிக்க | துருக்கியில் பேரிடர்: உதவ சென்ற இந்தியா... தடுக்க முயன்ற பாகிஸ்தான் - எப்படி தெரியுமா?

நிலநடுக்கத்தை முன்னரே கணிக்க முடியுமா?

நிலநடுக்கம் எங்கு ஏற்படும் என்பதை அறிய முடிந்தாலும், நிலநடுக்கம் எப்போது ஏற்படும் என்று கணிப்பதில் இருந்து இன்னும், ஆய்வில் வெகு தொலைவில் உள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இத்தகைய சூழ்நிலையில், நிலநடுக்கங்களை துல்லியமாக கணிக்க முடியுமா என்ற கேள்விக்கு லண்டன் இம்பீரியல் கல்லூரியின் நில அதிர்வு நிபுணர், டாக்டர் ஸ்டீபன் ஹிக்ஸ் பதிலளிக்கிறார்."பூகம்பத்தை முன்னறிவிப்பதுதான் நம்மால் முடியும். நம்மால் யூகிக்க முடியும். அமெரிக்காவின் கலிபோர்னியா போன்ற இடங்களில் அல்லது ஜப்பானில் நிலநடுக்கத்தை முன்னறிவிக்கும் வேலை இப்போது அதிகரித்து வருகிறது" என  ஸ்டீபன் ஹிக்ஸ் தெரிவித்தார். 

செய்ய வேண்டியவை & செய்யக்கூடாதவை

இருப்பினும், நிலநடுக்கம் எப்போது ஏற்படும் என்று கணிப்பது எளிதல்ல. ஆனால் நீங்கள் எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். பூகம்பத்தை எதிர்கொள்வதற்கான திட்டத்தை நீங்கள் எப்போதும் வைத்திருக்க வேண்டும் என்பதே இதன் பொருள். டாக்டர் ஸ்டீபன் ஹிக்ஸ் மேலும் கூறுவதாவது, "அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் பகுதியில் நீங்கள் வசிக்கிறீர்கள் என்றால், எந்த அவசர தேவைக்கும் உங்கள் வீட்டில் எப்போதும் ஒரு பையை தயாராக வைத்திருக்க வேண்டும். அந்தப் பையில் தண்ணீர், டார்ச், முதலுதவி பெட்டி மற்றும் சில உணவுப் பொருட்கள் இருக்க வேண்டும்" என்றார். மேலும், செஞ்சிலுவைச் சங்கத்தின் கூற்றுப்படி, மக்கள் கொஞ்சம் பணம், மருத்துவப் பதிவுகள் போன்ற முக்கியமான ஆவணங்களின் நகலையும் பையில் எடுத்துச் செல்ல வேண்டும் என்கிறது. 

ஓடுவதைத் தவிர்க்கவும்

அமெரிக்க அரசின் அறிவியல் அமைப்பான யுனைடெட் ஸ்டேட்ஸ் ஜியாலாஜிக்கல் சர்வேயின் கூற்றுப்படி, நிலநடுக்கம் ஏற்படும் போது நீங்கள் இருக்கும் இடத்திலேயே இருந்தால், காயம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு. அதனால்தான் நிலநடுக்கம் ஏற்படும்போது ஒரு அறையில் இருந்து மற்றொரு அறைக்கு ஓடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று புவியியல் ஆய்வு மையம் அறிவுறுத்துகிறது.

கீழே படுத்து உங்களை மூடிக்கொள்ளுங்கள்

உங்களைப் பத்திரமாக வைத்துக் கொள்வதற்கான ஃபார்முலா இதுதான். 'கீழே படுத்து, உங்களை மூடிக்கொண்டு, இறுக்கமாகப் பிடித்துக் கொள்ளுங்கள்' என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

உங்கள் கால்கள் மற்றும் முழங்கால்களிடுவது, மேலே இருந்து கீழே பொருள்கள் விழுவதைத் தவிர்க்க உதவும், மேலும் தேவைப்பட்டால் சிறிது நகரவும் உங்களை அனுமதிக்கும். நீங்கள் மறைப்பதற்கு வேறு இடம் இல்லாமல் மேஜை அல்லது மேசையின் கீழ் இருந்தால், நிலநடுக்கம் தொடரும் வரை அதைப் பிடித்துக் கொள்ளுங்கள்.

கதவுக்கு அருகில் நிற்கவும்

பூகம்பம் ஏற்பட்டால் தப்பிக்க வழிகளில் ஒன்று கதவுக்கு மிக அருகில் நிற்பது. ஆனால், நீங்கள் பழைய வீட்டில் வசிக்கிறீர்கள் என்றால், மேசைக்கு அடியில் ஒளிந்து கொள்வதே சிறந்த வழி என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். நிலநடுக்கம் காரணமாக, வீட்டின் ஜன்னல்கள் மற்றும் பால்கனிதான் பெரும்பாலும் முதலில் விழுகிறது. அத்தகைய சூழ்நிலையில், இந்த ஆபத்தான இடங்களில் இருந்து நீங்கள் விலகி இருக்க அறிவுறுத்தப்படுகிறது. பூமி நடுங்குவதை நிறுத்தினால், இடிந்து விழும் அபாயத்தில் இருக்கும் கட்டடத்தில் இருந்து வெளியே வருவது உங்களுக்கு பாதுகாப்பானது.

இவை அனைத்தும் நிலநடுக்கத்தின் போது நீங்கள் ஒரு கட்டடத்திற்குள் இருக்கும் நேரத்திற்கானவை. ஆனால், நிலநடுக்கத்தின் போது வெளியில் இருக்கும்போது என்ன செய்வது? நீங்கள் இருக்கும் இடத்தில் இருங்கள் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். ஏனெனில் கட்டடங்கள், மின்சாரம் மற்றும் தொலைபேசி கம்பங்களில் இருந்து தப்பித்து ஓடுவது உங்களுக்கு காயம் ஏற்படுத்தும் அபாயத்தை அதிகரிக்கிறது. ஆம், நீங்கள் முற்றிலும் திறந்த பகுதிக்கு செல்வது சிறந்தது. கட்டடங்களோ, மின்கம்பங்களோ இல்லாத இடத்திற்கு செல்ல வேண்டும். 

மேலும் படிக்க | நெஞ்சை உலுக்கும் வீடியோ: துருக்கி நிலநடுக்கம் - 22 மணிநேர போராட்டம்... பெண் உயிருடன் மீட்பு!
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

More Stories

Trending News