வாக்குப்பதிவு இயந்திரத்துடன் ‘புளூடூத்’ இணைத்ததாக புகார்: தேர்தல் கமிஷன் பதில்!

வாக்குப்பதிவு எந்திரத்துடன் ‘புளூடூத்’ கருவி இணைத்ததாக காங்கிரஸ் வேட்பாளர் கொடுத்த புகாருக்கு தேர்தல் கமிஷன் பதில் கூறியுள்ளது.

Last Updated : Dec 10, 2017, 10:33 AM IST
வாக்குப்பதிவு இயந்திரத்துடன் ‘புளூடூத்’ இணைத்ததாக புகார்: தேர்தல் கமிஷன் பதில்! title=

குஜராத்தில் நேற்று நடந்த முதற்கட்ட தேர்தலுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. வாக்குப்பதிவு நடைபெற்ற போது பல இடங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதடைந்ததால் அதிர்ச்சி ஏற்பட்டது. 

இதனால் அந்த வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு தாமதமானதுடன், வாக்காளர்கள் மத்தியிலும் சலசலப்பை ஏற்படுத்தியது. பின்னர் பழுதடைந்த எந்திரங்களுக்கு பதிலாக மாற்று எந்திரங்கள் பொருத்தப்பட்டன.

இதற்கிடையே வாக்குப்பதிவு எந்திரங்களுடன் செல்போன் ‘புளூடூத்’ கருவி இணைக்கப்பட்டு இருந்ததாக போர்பந்தர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அர்ஜூன் மோத்வாடியா பரபரப்பு புகார் கூறினார். சில வாக்குப்பதிவு எந்திரங்கள், செல்போன் போன்ற வெளிக்கருவிகளுடன் ‘புளூடூத்’ மூலம் இணைக்கப்பட்டு இருந்ததாக கூறிய அவர், அந்த கருவிகள் தொடர்பான படங்களுடன் தேர்தல் கமிஷனில் புகாரும் செய்தார்.

இவரின், புகாருக்கு பதில் கொடுத்த தேர்தல் அதிகாரி பி.பி.ஸ்வைன்: அந்த ‘புளூடூத்’ கருவி பூத் ஏஜெண்டு ஒருவரின் செல்போனுக்குரியது எனவும் இது வைத்து எந்த விதமான சதி செயல்களும் நடத்தப்பட வில்லை என்றும் அவர் கூறினார்.

 

Trending News