பிரதமர் மோடி எழுதிய மாணவர்களுக்கான "Exam Warriors"(எக்ஸாம் வாரியர்ஸ்) புத்தகத்தினை இன்று மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டார்!
இந்த புத்தக வெளியீட்டு விழாவின் போது மத்திய வெளியுறவுத் துரை அமைச்சர் சுஷ்மா ஸ்வாராஜ் உடன் இருந்தார்.
பாரத பரிதமர் மோடி அவர்கள் வானொலியில் உரையாற்றம் "மான் கி பாத்" மூலம் மாணவர்களின் உனர்வுகளுடன் தொடர்பு கொண்டு வருகின்றார். அதை தவிரவும் மாணவர்களிடையே நேரில் சென்று உரையாடி அவர்களுக்கு ஊக்கத்தினை அளித்து வருகின்றார்.
HRD Minister Prakash Javadekar & EAM Sushma Swaraj launch 'Exam Warriors', a book written by PM Narendra Modi for students pic.twitter.com/ug4cNeDaXS
— ANI (@ANI) February 3, 2018
அந்தவகையில் தற்போது, மாணவர்களின் மனஅழுத்ததினை குறைக்கும் வகையிலும், உத்வேகம் அளிக்கும் வகையிலும் கருத்துக்கள் மிகுந்த புக்கம் ஒன்றை எழுதியுள்ளார். இந்த புத்தகத்தினில் படிப்பு சுமையால் பாதிக்கப்படும் மாணவர்கள் எவ்வாறு தங்கள் மன உலைச்சல்களில் இருந்து வெளிவருவது என்பது குறித்து எழுதப்பட்டுள்ளது.
Exam Warriors என பெயரிடப்பட்ட இந்த புத்தகத்தினை பெண்குயின் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. மேலும் இப்புத்தகமானது பிரதமர் மோடி அவர்களால் தொகுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த புத்தகத்தினை மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இன்று வெளியிட்டுள்ளார்!