ராமர் கோவில் கட்டும் வரை ராமர் கோவிலுக்காக குரல் கொடுப்போம்: அமித் ஷா

இன்று நடைபெற்ற நேர்காணல் நிகழ்ச்சியில் பல கேள்விகளுக்கு ZEE நியூஸ் சேனலுக்கு பதிலளித்தார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Nov 23, 2018, 09:11 PM IST
ராமர் கோவில் கட்டும் வரை ராமர் கோவிலுக்காக குரல் கொடுப்போம்: அமித் ஷா title=

21:06 23-11-2018
2019 லோக்சபா தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றி மீண்டும் பாரதிய ஜனதா ஆட்சி அமைக்கும் என அக்கட்சியின் தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.


20:56 23-11-2018
ஐந்து சட்டமன்ற தேர்தலிலும் நாங்கள் வெற்றி பெறுவோம். 2014 மக்களவை தேர்தலில் தோற்ற 120 இடங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம்.


20:52 23-11-2018
ராமர் கோவில் கட்டுவதை பற்றி விரைவில் முடிவெடுக்கப்படும். அனைவரும் ஒன்றிணைந்து ராமர் கோவிலை கட்டுவோம். ராமர் கோவில் கட்டும் வரை ராமர் கோவிலுக்காக குரல் கொடுப்போம் என அமித் ஷா கூறினார்.


20:49 23-11-2018
கருப்புபணம் ஒழிப்பு மற்றும் ஜிஎஸ்டி கொண்டு வந்ததுக்கு மக்களுக்காக தான் தவிர, பிரதமர் மோடிக்காக அல்ல என அமிதா ஷா கூறினார்.


20:41 23-11-2018
பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் படிப்படியாக குறைந்து வருகிறது. மேலும் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது என அமிதா ஷா கூறினார்.


20:37 23-11-2018
மகா கூட்டணியின் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமித் ஷா, 1+1+1=11 ஆகாது. எனவே பலபேர் இணைவதால் மட்டும் வெற்றி பெற முடியாது. மக்கள் முடிவு செய்ய வேண்டும். வரும் 2019 மக்களை தேர்தலில் மேற்கு வங்க மாநிலத்தில் 23 இடங்களை கண்டிப்பாக வெல்வோம். இதை நினைவில் கொள்க". என கூறினார்.


பாரதீய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷாவிடம்  ZEE நியூஸ் ஆசிரியர் சுதிர் சௌத்ரி நேர்காணல் செய்தார். அப்பொழுது ஐந்து மாநிலம் சட்டசபை தேர்தல், அடுத்த வருடம் நடக்கவிருக்கும் மக்களவை தேர்தல், ராமர் கோவில், ரபேல் ஊழல் மற்றும் பாஜவுக்கு எதிராக மெகா கூட்டணி அமைக்கும் முயற்ச்சி என பல கேள்விகளுக்கு பதிலளித்தார்.

Trending News