மும்பை: இந்த ஆண்டிற்கான ’ஃபெமினா மிஸ் இந்தியா வேர்ல்ட் 2022’ அழகி பட்டத்தை வென்றுள்ளார் சினி ஷெட்டி. கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த 21 வயது சினி ஷெட்டிக்கு, கடந்த ஆண்டு அழகிப் பட்டம் மிஸ் இந்தியா 2021 மானசா வாரணாசி கிரீடம் சூட்டினார்.
ராஜஸ்தானைச் சேர்ந்த ரூபால் ஷெகாவத், முதல் ரன்னர் அப் மற்றும் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஷினாதா சவுகான், இரண்டாவது ரன்னர் அப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் நேற்று (2022, ஜூலை 3) நடைபெற்ற நிகழ்ச்சியில், நேஹா தூபியா, மலைக்கா அரோரா, டினோ மோரியா, ஆடை வடிவமைப்பாளர்கள் ரோஹித் காந்தி மற்றும் ராகுல் கண்ணா, நடன இயக்குனர் ஷியாமக் தாவர் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் ஆகியோர் அடங்கிய நடுவர் குழு அழகிகளை தேர்ந்தெடுத்தனர்.
பாலிவுட் நட்சத்திரங்கள் நிறைந்த விழாவில், நேஹா தூபியா, ராஜ்குமார் ராவ், மணீஷ் பால் என நட்சத்திரங்கள் டினோ மோரியா, மிதாலி ராஜ் மற்றும் மலைக்கா அரோரா ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் படிக்க | கேன்ஸ் விழாவில் உலக அழகி ஐஸ்வர்யா ராய் பச்சன்
யார் இந்த சீனி ஷெட்டி ?
21 வயதான இளம் அழகு ராணி இந்தியாவின் தென் மாநிலமான கர்நாடகாவை சேர்ந்தவர் என்றாலும், காராஷ்டிராவின் மும்பையில் பிறந்து வளர்ந்தவர். நிதித்துறையில் இளங்கலைப் பட்டம் பெற்ற ஷெட்டி, தற்போது பட்டய நிதி ஆய்வாளர் (CFA)க்கான தொழில்முறை கல்வியை கற்று வருகிறார்.
சீனியின் பிற திறமைகள்
பயிற்சி பெற்ற பரதநாட்டிய நடனக் கலைஞரான ஷெட்டி, 4 வயதில் பரதநாட்டியத்தை கற்கத் தொடங்கினார். லாரா தத்தா, சாரா ஜேன் டயஸ், மற்றும் சந்தியா சிப், நஃபிசா ஜோசப், லைமரைனா டி` சோசா உட்பட பல அழகு ராணிகளும் கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அழகிப் போட்டியின் இறுதிச் சுற்றில் சீனி ஷெட்டி அணிந்திருந்த ஆடையை வடிவமைத்தவர்கள் ரோஹித் காந்தி மற்றும் ராகுல் கண்ணா வடிவமைத்துள்ளனர்.
மேலும் படிக்க | சினிமாவிலிருந்து விலகுகிறார் நாசர்?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR