‘தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர்’ படக்குழுவினர் மீது வழக்குப்பதிவு...

‘தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர்’ பட விவகாரத்தில் நடிகர் அனுபம் கெர் உட்பட 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய முசாஃபர்பூர் நீதிமன்றம் உத்தரவு 

Updated: Jan 9, 2019, 10:06 AM IST
‘தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர்’ படக்குழுவினர் மீது வழக்குப்பதிவு...
Representational Image

‘தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர்’ பட விவகாரத்தில் நடிகர் அனுபம் கெர் உட்பட 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய முசாஃபர்பூர் நீதிமன்றம் உத்தரவு 

தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர்  படம் மன்மோகன் சிங் புகழுக்கு கலங்கம் விலைவிக்கும் வகையில் உருவாகி இருப்பதாக கூறி அதில் நடித்த அனுபம் கெர் மற்றும் படக்குழுவினர் 13 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பற்றி அவரது ஊடக ஆலோசகராக இருந்த சஞ்சய் பாரு எழுதிய புத்தகத்தை அடிப்படையாக கொண்டு  தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் என்ற திரைப்படம் தயாராகியுள்ளது.

இந்தப் படத்தில் மன்மோகன் சிங் வேடத்தில் நடிகர் அனுபம் கெர், சஞ்சய் பாருவேடத்தில் அக்சய் கண்ணா மற்றும் சோனியா, ராகுல், வாஜ்பாய் உள்ளிட்ட பல தலைவர்கள் கதா பாத்திரங்களிலும் நடிகர்கள் பலர் நடித்துள்ளனர். வரும் 11ம் தேதி திரைக்கு வர உள்ள இப்படத்தின் டிரைலர் டிசம்பர் இறுதியில் வெளியானது. டிரைலர் வெளியானது முதலே படம் பற்றிய பல்வேறு சர்ச்சைகளும் எழுந்து , படத்தை தடைசெய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்தன.

இந்நிலையில் படம் மன்மோகன் சிங் புகழுக்கு கலங்கம் ஏற்படுத்தும் விதத்தில் இருப்பதாக பீகாரைச் சேர்ந்த சுதிர் குமார் ஓஜா என்ற வழக்கறிஞர் போலீசில் புகார் செய்தார். இந்தப் புகாரைப் பதிய போலீசார் மறுத்ததால் முசாபர்பூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர்கள் உள்பட 14 பேர் மீது வழக்குப்பதிய போலீசுக்கு உத்தரவிட்டார்.