கர்ப்பிணி யானைக்கு அன்னாசி பழத்தில் பட்டாசு வைத்து உணவளித்தவர்கள் மீது FIR பதிவு

வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் அடையாளம் தெரியாத நபர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மன்னர்க்கட் வன வரம்பு அதிகாரி புதன்கிழமை (ஜூன் 3) தெரிவித்தார்.

Last Updated : Jun 3, 2020, 02:31 PM IST
கர்ப்பிணி யானைக்கு அன்னாசி பழத்தில் பட்டாசு வைத்து உணவளித்தவர்கள் மீது FIR பதிவு

கேரளாவின் மலப்புரத்தில் கர்ப்பிணி யானைக்கு பட்டாசுகளால் நிரப்பப்பட்ட அன்னாசிப்பழத்திற்கு உணவளித்த சம்பவம் தொடர்பாக வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் அடையாளம் தெரியாத நபர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மன்னர்க்காட் வன வரம்பு அதிகாரி புதன்கிழமை (ஜூன் 3) தெரிவித்தார்.

மலப்புரம் மாவட்டத்தில் ஒரு வன அதிகாரி இந்த கொடூரமான சம்பவம் குறித்த விவரங்களை தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து கொண்டதை அடுத்து இந்த அதிர்ச்சி சம்பவம் செவ்வாய்க்கிழமை வெளிச்சத்துக்கு வந்தது.

READ | கேரளாவில் பட்டாசுகள் நிரப்பப்பட்ட அன்னாசிப்பழத்தை சாப்பிட்டு கர்ப்பிணி யானை மரணம்

 

வன அலுவலர் வழங்கிய விவரங்களின்படி, காட்டு கர்ப்பிணி யானை உணவு தேடி கிராமத்திற்கு வந்த நிலையில், யாரோ பட்டாசுகள் மறைத்து வைத்த அன்னாசி பழத்தை உணவாக தந்துள்ளனர். நம்பி வாங்கி உண்ட யானை, பழத்தை கடிக்கும் போது வெடி மருந்து வெடிக்க, அதன் வாய் மற்றும் நாக்கு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இன்னும் 18 அல்லது 20 மாதங்களுக்குள் குட்டியை ஈனும் நிலையில் யானை இருந்தது.

வலியுடன் கிராமத்தின் தெருக்களில் ஓடியபோதும் கர்ப்பிணி யானை யாரையும் தாக்கவில்லை, எந்த சேதத்தையும் ஏற்படுத்தவில்லை. பட்டாசு வாய் மற்றும் நாக்கில் ஏற்படுத்திய படுகாயத்தால் அந்த யானை உணவு உட்கொள்ள முடியாமல் சில நாட்கள் கழித்து அந்த யானை உயிரிழந்தது. என்று யானையை மீட்பதற்கான விரைவான மறுமொழி குழுவில் அங்கம் வகித்த வன அதிகாரி மோகன் கிருஷ்ணன் மலையாளத்தில் பேஸ்புக்கில் எழுதினார்,

காயமடைந்த கர்ப்பிணி யானையை ஆற்றில் இருந்து வெளியேற்ற வன அதிகாரிகள் இரண்டு கும்கி யானைகளை அழைத்து வந்தனர், ஆனால் அந்த முயற்சி பலனளிக்கவில்லை. அவளை மீட்க பல மணிநேர முயற்சிகளுக்குப் பிறகு, காயமடைந்த கர்ப்பிணி யானை தண்ணீரில் இறந்தது.

More Stories

Trending News