மும்பை விமான நிலையித்தில் தீ-விபத்து: தொடர் அதிர்ச்சியில் மக்கள்!!

ஒரே நாளில் அடுத்தடுத்து தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Last Updated : Jan 13, 2018, 04:16 PM IST
மும்பை விமான நிலையித்தில் தீ-விபத்து: தொடர் அதிர்ச்சியில் மக்கள்!! title=

ஜெய்ப்பூர் சிலிண்டர் தீ விபத்து, குஜராத் தீ விபத்தினை, தொடர்ந்து மும்பை விமான நிலையத்தில் தற்போது தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தின் தலைநகரமான மும்பை தெற்கு பகுதியில் உள்ள விமான நிலையத்தில் தற்போது தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இன்று காலை சுமார் 3 மணியளவில் இந்த விமான நிலையத்தின் முதல் தளத்தில் (1A ) தீ பிடித்து எரிவதாக தீ அணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இந்த தீயை அணைக்க தீ அணைப்பு துறையினர்  5 பேர் ஈடுபட்டுள்ளனர். மற்ற பகுதிக்கும் தீ பரவுகிறது. இந்த விபத்தில் ஏற்பட்ட அசம்பாவிதம் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை  மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும்,குஜராத் மாநிலத்தில் உள்ள ஷாஃபிர் ஷிபிர் நகரில் தீடிரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் சம்பவ இடத்திலே 3 பெண்கள்  உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 5 பேர் படுகாயமடைந்தனர்.

ஜெய்ப்பூரில் இன்று காலை தீடிரென ஏற்ப்பட தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்துள்ளது குறிபிடத்தக்கது.

Trending News