பிரயாகராஜ் கும்ப மேளா துவங்கவுள்ள நிலையில், அங்கு அமைக்கப்பட்டுள்ள தற்காலிக குடிலில் திடீர் தீ விபத்து.....
பிரியாகராஜ் என பெர்மாற்றம் செய்யப்பட்ட அலகாபாத்தின் முதல் கும்பமேளா வரும் ஜனவரி 15 ஆம் நாள் துவங்கி வெகு விமர்சையாக நடைப்பெறவுள்ளது. எதிர்வரும் விழாவை முன்னிட்டு ₹4300 கோடி செலவில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் முன்னெடுக்கப் பட்டு வருகிறது. மத்திய, மாநில அரசுகள் இணைந்து சுமார் 250 சதுர கிமி பரப்பளவில் தனிவொரு தற்காலிக நகரத்தினை ஏற்பாடு செய்துவருகின்றனர்.
இதன் ஒருபகுதியாக, விழாவிற்கு வரும் தலைவர்களின் ஹெலிகாப்டர்களை இறக்குவதற்கு ஏதுவாக ஹெலிப்போர்ட் எனப்படும் இறக்குதளம் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், திகம்பர் காட் அருகே அமைக்கப்பட்டுள்ள, திகம்பர் அகாடா குடிலில், திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ மளமளவென பரவி வருவதால், ஏராளமான குடில்கள் தீக்கிரையாகியுள்ளன. சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள தீயணைப்பு படையினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தற்காலிக குடிலில் பயன்படுத்தப்பட்ட சமையல் காஸ் சிலிண்டர் வெடித்ததே, தீ விபத்திற்கு காரணம் என, முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Prayagraj: Fire breaks out at a camp of Digambar Akhada at #KumbhMela pic.twitter.com/yq0yO7jr4i
— ANI UP (@ANINewsUP) January 14, 2019
பிரியகராஜில் கும்ப மேளா வரும் ஜனவரி 15-ஆம் தேதி துவங்கி மார்ச் 4-ஆம் நாள் வரை நடைபெறுகிறது. உலகின் மிகப்பெரிய கலாச்சார மற்றும் சமய நிகழ்வு என பிரகடனம் செய்யப்படும் கும்ப மேளா UNESCO-வின் உலக பாரம்பரியத் தகுதியைப் பெற்றுள்ளது. 'மனிதகுலத்தின் அருவமான கலாச்சார மரபு' பட்டியலில் இந்த கும்பமேளா சேர்க்கப்பட்டுள்ளது. இந்தாண்டு நடைபெறும் கும்பமேளாவில் 192 நாடுகளின் பிரதிநிதிகள் பங்குபெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலக புகழ் பெற்ற இந்த விழாவில் கலந்துக்கொள்ள சுமார் 5000 வெளிநாடு வாழ் இந்தியர்கள் தாயகம் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்தாண்டு கும்பமேளாவிற்கு 12 கோடி பக்தர்கள் வரை வருகை புரிவர் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தாயகம் வரும் மக்களுக்கு ஏதுவாக உலகின் மிக பெறிய தற்காலிக குடியிறுப்பு கிராமத்தை உருவாக்க உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் முடிவுசெய்துள்ளார்.
#WATCH Fire fighting operations underway at a camp of Digambar Akhada at #KumbhMela in Prayagraj after a cylinder blast. No loss of life or injuries reported. pic.twitter.com/qcbh8IPl5Y
— ANI UP (@ANINewsUP) January 14, 2019
அதேப்போல் பிரியாகராஜ் வரும் மக்களின் பாதுக்காப்பு பணிக்காக, சுமார் 20,000 சைவ காவலர்களை பயன்படுத்த உத்திரபிரதேச காவல்துறை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. கடந்த வாரம் தற்காலிக கட்டிடத்தின் ஒருபகுதி சரிந்து விழ்ந்தது இரண்டு தொழிலாளர்கள் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது!